கிராமப்புற மாணவர்களும், அரசு பள்ளியில் படிப்பவர்களும் உச்சங்கள் தொடலாம் என்பற்கு, பல உதாரணங்கள் உண்டு. எங்கு படிக்கிறோம் என்பதை விட, என்ன படிக்கிறோம், எப்படி படிக்கிறோம் என்பது தான் முக்கியம். தமிழ் சமுதாயத்தில் இன்று, அவலக்கேடான சூழல் நிலவுகிறது. ஒரு சிலர் சேர்ந்து, பெரும்பான்மையோருக்கு எது வேண்டும், வேண்டாம் என்று தீர்மானிக்கும் போக்கு, மிகுந்து வருகிறது. நம்மை ஆளப்போகும் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, நாம் காட்டும் அலட்சியம், பிற்காலங்களில் நமக்கானவற்றை தேர்ந்தெடுக்க இயலாதவாறு செய்து விடுகிறது.
நாம் உடுத்தும் உடை, உண்ணும் உணவு, பார்க்கும் திரைப்படங்களின் கதை, நடிகை, நடிகர்கள்; படிக்கும் பத்திரிகைகளின் செய்திகள், கட்டுரைகள்; கேட்கும் ஊடகங்களின் விவாதங்கள்; பயிலும் பள்ளி, கல்லுாரிகளின் பாடத் திட்டங்கள், பங்கேற்கும் தேர்வுகள். மேலும், கும்பிடும் தெய்வங்கள், நடத்தும் சடங்குகள் என எதிலும் தலையிட்டு, நம் உரிமை களைப் பறிக்கும் ஒரு கூட்டம் இங்கு திட்டமிட்டு இயங்கி வருவது கண்கூடு. இவர்களுக்கு யார் அந்த அதிகாரத்தை வழங்கியது? நம் எதிர்ப்புகள் இங்கு வலுவாக வெளிப்படுத்தப்படாததால், இது போன்ற நாட்டாமை நரிகள் இன்று அதிகமாக உலாவுகின்றன.
மாநிலத்திற்கு மாநிலம், பாடத்திட்டங்கள் அந்தந்த மாநிலத்தில் உள்ள, இது மாதிரியான கூட்டங்களாலேயே வகுக்கப்படுகின்றன. நம் மாநிலத்தில் இவை, மாணவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களாக அல்லாமல், அவர்களை கிணற்றுத் தவளைகளாக மாற்றுபவையாகவே உள்ளன. கட்டமைப்பில் மேம்பட்டவையேஎன்.சி.இ.ஆர்.டி., வேண்டாம்; சி.பி.எஸ்.இ., வேண்டாம்; ஐ.சி.எஸ்.இ., வேண்டாம்; நவோதயா பள்ளிகள் வேண்டாம்; பொது நுழைவுத் தேர்வுகள் வேண்டாம்; 'நீட்' வேண்டாம் என்று எதற்கும் தடை போடுகின்றனர்.
இதற்கு இவர்கள் சொல்லும் காரணம், தமிழக மாணவர்கள், குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள், பிற மாநில மாணவர்களுடன் போட்டியிட முடியாதென்பதே. இது, வெட்கப்பட வேண்டிய விஷயம். இந்த நிலைக்கு நம் மாணவர்களை கொண்டு வந்தது யார்? இன்று, தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடப்படுகையில், அரசு பள்ளிகள் நிச்சயமாக கட்டமைப்பில் மேம்பட்டவையே. விளையாட்டு மைதானங்கள் உட்பட அனைத்து வசதிகளும் கொண்டவையே. நிதிப் பற்றாக்குறை கிடையாது. ஆசிரியர்களுக்கு சம்பளக் குறைவு என்பது இல்லை.
பின் ஏன் இந்த நிலை? ஆராய்ந்தால், இந்தக் கூட்டத்தின் உண்மை சொரூபம் தெரிய வரும். இன்று, அனேகமாக ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் உள்ள ஒவ்வொரு வார்டிலும், ஒரு அரசு பள்ளி உள்ளது.அதை பராமரிக்க, அரசு ஒதுக்கும் தொகையை முறையாக செலவழிக்க, அந்தந்த கிராமத் தலைவர்கள் அக்கறை எடுத்துக் கொண்டாலே, அரசு பள்ளி மீது ஏற்படும் ஒருவித தாழ்வுணர்வு முதலில் நீங்கும். அதை செயல்படுத்த விடாமல், அந்த நிதியை வாரிக் கொள்ள திட்டம் போடுவது இக்கூட்டமே. இன்று, தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களை எல்லாம் கணக்கில் கொண்டால், நம் நாட்டிலேயே, முதல் மாகாணமாக விளங்க வேண்டும்.
கோலிக்குண்டு விளையாடக்கூட இடம் இல்லாத இட வசதியுடன் இயங்கும் பள்ளி முதல், குதிரையேற்றம் பழக்கும் அளவுக்கு இடம் உள்ள பள்ளி வரை இங்கு பரவிக் கிடக்கின்றன. அங்கும், சொற்ப ஊதியத்திலும் நன்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர் என்பது கண்கூடு. பத்தாம் வகுப்பு வரை, சி.பி.எஸ்.இ., முறையில் பயின்று, பின், மெட்ரிக் முறைக்கு மாறி, அதிக மதிப்பெண் பெற்று, இந்த கல்லுாரிகளில் ஒன்றில் இடம் பிடித்து, பட்டம் பெற்று, வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பை தேடி ஓடுவது தான், இன்றைய இளைய தலைமுறையின் லட்சியமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அதற்காக இயங்கும் தனியார் பயிற்சி மையங்கள், இவர்களை குறிவைத்தே ஆரம்பிக்கப் பட்டுள்ளன. இவற்றுக்கு எல்லாம், கல்வித் தந்தைகள் தான் சூத்ரதாரிகள். இவர்களுக்கும், அந்தக் கூட்டத்திற்கும் தொடர்பு உண்டு. அரசு பள்ளிகள் தரம் உயர்ந்து விட்டால், இவர்களது கல்வி வியாபாரம் படுத்து விடும். ஏழை மாணவன், வசதியானவனுக்கு நிகராக கல்வி வசதி பெற்றுவிட்டால், இவர்களது கவர்ச்சி விளம்பரங்கள் எடுபடாமல் போய்விடும். துாதர்கள், செயல் வீரர்கள்வசதியானவனும் அரசு பள்ளியில் சேர்ந்துவிட்டால், இவர்களது சகல வசதி பள்ளிகள் காற்று வாங்க ஆரம்பித்து விடும். இதெல்லாம் நடக்காமல் இருக்க, அரசு பள்ளிகள் அடிமட்டத்திலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணங்கொண்டே இந்த கூட்டம், பாடத்திட்டங்கள் முதற்கொண்டு எல்லாவற்றையும் தீர்மானிக்கும் உரிமையை தாமாகவே எடுத்துக் கொள்கிறது.
இந்த சட்டாம்பிள்ளைத்தனத்தைத் தட்டிக்கேட்கும் உண்மைக் கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும், 'தட்டி' வைக்கப்படுகின்றனர். பணம் பாதாளம் வரை பாய்ந்து, சம்பந்தப்பட்டவர்களின் வாயையும், கையையும் கட்டி வைக்கிறது. இந்த அவல நிலையை மறைப்பதற்கு, புதிது புதிதான இட ஒதுக்கீடுகள் பற்றிய கோரிக்கைகள் எழுப்பப்பட்டு, மக்கள் கவனம் மடைமாற்றப்படுகிறது. உண்மையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் திறமை இல்லாதவர்களா; அர்ப்பணிப்பு உணர்வு இல்லாதவர்களா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். மாணவர்களின் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக செலவழிக்கும் வகையில், பள்ளி வளாகத்திலேயே, விவசாயம் கற்றுத் தரும் ஆசிரியர், வருடா வருடம், 100 சதவீத தேர்வு காட்டும் ஆசிரியர்கள், தங்கள் சொந்த செலவில், மாணவர்களுக்கு உணவு, உடை மற்றும் உறைவிடமும் ஏற்படுத்திக் கொடுக்கும் நல்லாசிரியர்கள் உள்ளனர்.ஏழை மாணவர்களுக்குத் தேவையான கைபேசி, மடிக்கணினியையும் கூட தங்கள் கைக்காசிலேயே வாங்கிக் கொடுக்கும் உத்தமர்கள், ஒரே ஒரு மாணவனுக்காக பல்வேறு வாகனங்களில், பல காததுாரம் பயணித்துப் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் என, தங்கள் தொழிலைத் தெய்வமாக, சேவையாக மதித்து பணியாற்றும் பலர் உள்ளனர். இவர்கள் தான், 'குரு' என்ற பதத்திற்கான உண்மை உதாரணங்கள். இன்று, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பிப்பதைத் தவிரவும், அனைத்து விதமான பணிகளும் தரப்படுகின்றன.அரசின் எந்தவொரு திட்டத்திற்கும், இவர்களே துாதர்கள், செயல் வீரர்கள். மக்கள்தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் அட்டை வினியோகம் என அனைத்துப் பணிகளுக்கும் இவர்களே முதலில் அழைக்கப்படுவர். இவர்களது பள்ளிக்கூடங்களே அனைத்து முகாம்களுக்கும் இடம். இங்கும் நிரந்தரப் பணியாளர்களுக்கு மாற்றாக, தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படுவோர் அதிகம். ஆசிரியர்களே சத்துணவு தயாரிக்கவும் பணிக்கப்படுவது உண்டு. இதற்கு மத்தியில் தான் இவர்கள் போதிக்க வேண்டும்.
மாணாக்கனை வீட்டிற்குச் சென்று அழைத்து வரவும் வேண்டும். முதலாம் தலைமுறையாக பள்ளிப் பக்கம் வருபவர்களும் இவர்களால் கற்பிக்கப்பட வேண்டும். இன்று பல்வேறு துறைகளிலும், நம் மாநிலத்தில் உள்ள அலுவலகங்களிலும், பிற மாநிலத்தவர் அதிகமாகக் காணப்படுவதன் காரணம் என்ன தெரியுமா? அவர்கள், இங்கு வந்து தேர்வு எழுதினால், சுலபமாக தேர்வு பட்டியலில் முன்னிலை பெற்று விடலாம் என்று கருதுவது தான். அது உண்மையும் கூட. இந்த அளவு, நம் தேர்வாளர்கள் குறைந்த மதிப்பெண் பெறுவதன் காரணம், நம் கல்வித் திட்டம் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அளிக்காததே. இன்று, பிற மாநிலத்தவரது திறமையை அங்கீகரிக்காமல், அவர்கள் ஆதிக்கம் செய்கின்றனர் என்று கூச்சல் போடுபவர்கள் எல்லாம், தங்களது தவறுகளை மறைக்கத் துடிக்கும் இந்தக் கூட்டத்தினரே. மக்களைத் திசை திருப்பி, அதில் உண்டாகும் குழப்பத்தில் குளிர் காயத் துடிக்கும் குள்ளநரித்தனம் கொண்ட கும்பலே. பிடிக்கும் படிப்பைத் தேர்ந்தெடுக்கவும் இயலாத நிலை இன்று இவர்களால் தான் ஏற்பட்டுள்ளது. காசு பிடுங்கும் கல்விக்கூடங்கள் தான் உயர்ந்தவை என்று, மக்களை மூளைச்சலவை செய்து, அதிலும் கிடைக்கும் படிப்பே பெரிது என்ற மாயை உண்டாக்கி, மாணவர்களை மாட்டு மந்தைகளாக மாற்றும் மோசடிக் கும்பல்கள் தான், இன்று நமக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்று வரையறுத்துக் கொண்டிருக்கிறது. இவர்களது பள்ளிகளில் காசு கொடுத்தால் எதுவும் சொல்லிக் கொடுக்கப்படும். ஆனால், இலவசமாக அரசு பள்ளிகள் அதை செய்து விடக்கூடாது; அந்த வாய்ப்பை கூடக் கொடுத்து விடக்கூடாது. அந்த மாணவர்கள் எந்த ஒரு பாடத்தையும் முழுமையாக படிக்க முடியாதவாறு செய்து, அவர்களுக்கு உயர் கல்வியில் தனி ஒதுக்கீடு வேண்டும் என்று போராடி, சிலருக்கு இடம் வாங்கிக் கொடுத்து, மார் தட்டிக்கொள்ளும் இவர்கள், அந்த மாணவர்கள் அங்கு திண்டாடுவதை உணர்ந்து தான் உள்ளனர்.
கல்வித் தரத்தை மேம்படுத்தவதற்கான எந்த ஒரு முயற்சியையும் செய்யாமல், பிறரையும் செய்யவிடாமல் பார்த்துக்கொள்வது தான் இவர்களது தொழில். மருத்துவத்தையும், கல்வியையும் வியாபாரமாக நோக்கும் இந்த கீழான மனிதர்களின் தலையீடு இருக்கும் வரை, நம் மாநில மாணவர்கள் முன்னேறுவது கடினமே. உயிர் உறிஞ்சும் ஒட்டுண்ணிகள்தொழிற்சாலை வேண்டாம் என்று போராடி, அவற்றை மூட வைத்து, 100 நாள் வேலைத்திட்டத்தை மட்டும் மக்களுக்கு அளித்துள்ளது இவர்களே.இலவசம் இலவசம் என்று மக்களை சோம்பேறிகளாக, பிச்சை எடுத்துத் தின்னும் நிலைக்கு மாற்றி, அதிலும் தங்களுக்கு ஒரு தொகையைப் பெற்றுக் கொள்ளும் இவர்கள், உயிர் உறிஞ்சும் ஒட்டுண்ணிகள்.இனியும் இவர்களை மக்கள் தடுக்காமல் இருந்தால், நம் மாநிலம் ஒரு தகுதியானவனைக் கூட உருவாக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விடும். நம் ஆசிரிய சமுதாயம், மாணவர்களுக்கு இவர்களை அடையாளங்காட்டி ஒதுக்கக் கற்றுக் கொடுத்தால் மட்டுமே, இளைய சமுதாயம் நல்வழி காண முடியும்!ச.பாலசுப்ரமணியன்பொதுத்துறை வங்கி ஊழியர்தொடர்புக்கு:இ - மெயில்: balucbeu@gmail.com
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.