பள்ளிக்கல்வி விடுமுறை அனுபவிக்கும் அரசு பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு காலத்திற்கு ஏற்றவாறு கணக்கில் சேர்க்கப்படும் ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டுமா என்பது குறித்து விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، نوفمبر 30، 2020

Comments:0

பள்ளிக்கல்வி விடுமுறை அனுபவிக்கும் அரசு பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு காலத்திற்கு ஏற்றவாறு கணக்கில் சேர்க்கப்படும் ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டுமா என்பது குறித்து விளக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக்கல்வித் துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை-9.
கடிதம் எண். 19753/ அநழு2/2019-1, நான், 23.12.2019,
அனுப்புநர்,
திருமதி ஜா, ஆனி மேரி சுவர்ணா,
அரசு துாைாச் செயலாளர்.
பெறுநர்
'திரு.R.கலையரசன்,
எண்.35B, அண்ணாநகர்,
மேலா.லூர், உலூர் மேற்கு,
ஒரத்தநாடு தாலுகா,
தஞ்சாவூர் மாவட்டம் - 614 904,
ஐயா,
பொருள்:
பள்ளிக்கல்வி விடுமுறை அனுபவிக்கும் அரசு பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு காலத்திற்கு ஏற்றவாறு கணக்கில் சேர்க்கப்படும் ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டுமா என்பது குறித்து விளக்கம் - கோருதல். முதலமைச்சர் தனிப்பிரிவு வாயிலாக பெறப்பட்ட தஞ்சாவூர்
மாவட்டம், திரு.R.கலையரசன், மனு நாள் 20.07.2019. பார்வை:
பார்வையில் காணும் தங்களது மனுவில் vacation leave அனுபவிக்கும் அரசுப் பணியாளர்கள் பொறுத்த வரை அவர்கள் அனுபவித்த other kinds of eligible leave மருத்துவ சான்றுடன் கூடிய மருத்துவ (ஈட்டா) விடுப்பு மகப்பேறு விடுப்பு, கருசிதைவு விடுப்பு போன்ற (சம்பளம் மற்றும் படிகளுடன்) முழு ஊதியத்துடன் கூடிய சாதாரண வகை விடுப்புகளுக்கும் ஏற்ப ஈட்டிய விடுப்பு குறைத்து அவர்களது கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்பது விதிகளின்படி சரியான நடைமுறையா என்பதை தெளிவு படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விடுப்பு விதிகளின்படி விடுமுறை அனுபவிக்கும் பணியாளர்கள் அனுபவித்த ஊதியமில்லா அசாதாரண விடுப்பிற்கு மட்டுமே தமிழ்நாடு விடுப்பு விதிகளில் விதி 9 (a)ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் நம்பிக்கையுள்ள

அரசு துணைச் செயலாளருக்காக

நகல் :

முதலமைச்சர் தனிப்பிரிவு,

செள்ளை-9) 6.ஈட்டிய விடுப்பு
(அரசாணை எண் 157, P& A.R. dt. 24.6.94)

(அ) 1.7.94 முதல் விடுப்பு முற்றிலுமாக மைய அரசு ஊழியருக்கு வழங்கப்படுவது போன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
(ஆ) இதன்படி ஜனவரி 1 மற்றும் ஜுலை 1, ஆகிய தேதிகளில் அரசு ஊழியருக்கு முறையே 15 நாட்கள் ஈட்டிய விடுப்புக் கணக்கில் சேர்க்கப்படும்
(இ) 30.6.94 அன்று ஒருவரின் ஈட்டிய விடுப்புக் கணக்கு முடிக்கப்படும். 1.7.94 அன்று 15 நாட்கள் அதனுடன் சேர்க்கப்படும். மொத்தம் 240 நாட்களுக்கு அதிகமாகக்கூடாது.
(ஈ) ஒரு அரை ஆண்டின் இடையில் புதியதாக பணி ஏற்கின்ற முறையான ஊழியருக்கு ஒரு மாதத்திற்கு 2% நாள் என்ற அளவில் அவரின் கணக்கில் இருப்பு வைக்கப்படும்.

(உ) அரை ஆண்டின் இடையில் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்ற அல்லது விலகும் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 2% என்ற அளவில் ஈட்டிய விடுப்புக் குறைக்கப்படும். இதே போன்று பணிக்காலத்தில் இறப்பவர்களுக்கும் பணியிலிருந்து நீக்கப்படுபவர்களுக்கும் ஈட்டிய விடுப்பு குறைக்கப்படும்.

(ஊ) ஒரு அரையாண்டில் ஈட்டிய விடுப்பில் சேர்த்த பின்னர் ஒருவர் ஊதியமில்லா விடுப்பு அனுபவிக்க நேருமாயின் (L.L.P. with or without M.C) 10 நாள் L.L.Pக்கு ஒரு நாள் என்ற அளவில் இவ்விடுப்பு குறைக்கப்படும்.

(எ) பின்னமாக வரும் ஈட்டிய விடுப்பு முழு நாளாக கணக்கிடப்படும்

(எ)தற்காலிகப் பணியாளர்கள் விஷயத்தில் ஒரு அரையாண்டில் அவர்கள் பணிபுரியக்கூடிய ஒவ்வொரு இரண்டு முழு மாதத்திற்கும் மொத்த இருப்பு 30 நாட்களுக்கு அதிகமாகக்கூடாது. (ஐ கடைநிலை ஊழியருக்கு மேலே (ஏ) ல் குறிப்பிட்டபடி ஈட்டிய விடுப்பு இருப்புவைக்கப்படும். பணிவரன்முறை செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் முடிந்தபின்னர், அரை ஆண்டின் துவக்கத்திலேயே 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு இவர்கள் கணக்கில் இருப்பு வைக்கப்படும்.
(ஓ) ஒரு அரை ஆண்டின் முதலில் ஒருவர் விடுப்பில் இருக்க நேரிட்டால், அவர் மீண்டும் பணி ஏற்பார் என்று திட்டவட்டமாகத் தெரிந்தால்தான் அவர்களுக்கு 15 நாட்கள் இருப்பு வைக்கப்படும்.
(ஓ) ஒரு ஆண்டு துவக்கத்தில் 226 முதல் 240 ஈட்டிய விடுப்பு இருப்பு இருக்கும் பட்சத்தில், அவருக்கு அரை ஆண்டு துவக்கத்தில் இருப்பு வைக்கப்படும் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு தனியாக இருப்பு வைக்கப்படும். அந்த அரை ஆண்டில் அனுபவிக்கும் ஈட்டிய விடுப்பு மற்றும் சரண் விடுப்பு போக மீதம் உள்ள விடுப்பு, அரை ஆண்டின் இறுதியில் பழைய இருப்பில் சேர்க்கப்படும். அதன் மொத்தம் 240 நாட்களுக்கு அதிகமாகக் கூடாது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة