மதுரை காமராஜ் பல்கலை டீன் நல்லகாமன் பதவிக் காலம் முடிந்தும், இரண்டு மாதங்கள் அவரை பணி செய்ய அனுமதித்த விதிமீறல் குறித்து, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
பல்கலை உயர் பதவியான டீன் பதவிக் காலம், மூன்று ஆண்டுகள். இதில், 65 வயதுக்கு மேல் நீடிக்க முடியாது என்பது விதி. 2017 நவ., 2ல், மதுரை காமராஜ் பல்கலை டீனாக நல்லகாமன் பதவியேற்றார்.இதன்படி, 2020 நவ., 2ல் பதவி காலம் முடியும் என்றாலும், அவர் பிறந்த தேதியான, 7.8.1955 அடிப்படையில், ஆக., 6ல், அவருக்கு, 65 வயது பூர்த்தியடைந்தது. அதன்பின் அவர் பதவி நீடிக்க முடியாது. ஆனால், விதிமீறி இரண்டு மாதங்கள் பதவியில் நீடித்து, சம்பளமும் பெற்றுள்ளார்.
இதை சுட்டிக்காட்டி, 'பல்கலை சட்டம், ஒழுங்கு விதிகளை கண்காணித்து, அதை நடைமுறைப்படுத்துவது துணைவேந்தரின் பிரதான கடமை.'இந்த விதிமீறலுக்கு யார் காரணம் என கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கவர்னருக்கு அனுப்பிய புகாரில், மதுரை மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் உறுப்பினர் லயனல் அந்தோணிராஜ் வலியுறுத்தியுள்ளார்.மேலும், 'செப்., 12ல் நடந்த சிண்டிகேட் கூட்டத்திலும், நவ., 2ல் டீன் பதவிக்காலம் முடிவதாக தீர்மானத்தில் குறிப்பிட்டு, அவரது பிறந்த தேதியை கணக்கில் கொள்ளாமல், தவறான தகவலை சிண்டிகேட்டில், துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்து, விதியை மீறியுள்ளார்' எனவும், அந்தோணிராஜ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விதிமீறலுக்கு முழு பொறுப்பு யார்? மிகப் பெரிய தவறு நடக்கும் வரை, துணைவேந்தர் அலுவலகம் என்ன செய்தது என்பது குறித்து, விசாரணை நடத்த கவர்னர் உத்தரவிட வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.