தமிழ்நாடு பொறியியல் பி.இ., பி.டெக், சேர்க்கை 2020-21 ஆம் ஆண்டிற்கான துணைகலந்தாய்வு தொடர்பான உயர்கல்வித்துறை செய்தி குறிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 03, 2020

Comments:0

தமிழ்நாடு பொறியியல் பி.இ., பி.டெக், சேர்க்கை 2020-21 ஆம் ஆண்டிற்கான துணைகலந்தாய்வு தொடர்பான உயர்கல்வித்துறை செய்தி குறிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொறியியல் துணை கலந்தாய்வுக்கு இன்று முதல் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்காக, இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை, ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பொறியியல் பி.இ./பி.டெக்., மாணாக்கர்கள் சேர்க்கை 2020-21 பொதுகலந்தாய்வு முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, துணை கலந்தாய்வு விளம்பர அறிவிக்கை 03.11.2020 அன்று வெளியிடப்பட உள்ளது. சிறப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற 12 ஆம் வகுப்பு பொது (Academic) மற்றும் தொழிற்கல்வி (Vocational) பயின்ற தகுதி வாய்ந்த தமிழ்நாட்டை சார்ந்த மாணாக்கர்கள் மற்றும் பொதுக்கலந்தாய்வில் பங்கேற்க இயலாத மாணாக்கர்களும் இந்த துணைக்கலந்தாய்வில் கலந்து கொண்டு இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லுாரிகள், பலவகை தொழில் நுட்பக் கல்லுாரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கிய 52 பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள் மாணாக்கர்களுக்கு இணைய தளம் மூலம் பதிவு செய்ய வழிகாட்டுதல் வழங்கப்படும். மாணாக்கர்கள், 03.11.2020 அன்று வெளியிடப்பட உள்ள துணைக்கலந்தாய்வு அறிவிக்கையினை தொடர்ந்து, விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக 03.11.2020 - ம் தேதி முதல் 07.11.2020 - ம் தேதி வரை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்படி, மாணாக்கர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews