இந்த ஆண்டு சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் இதற்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், 10 வயதுக்குட்பட்டவர்கள், 60 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கும் அனுமதி இல்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
“தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கேரளாவிலுள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வருகின்றனர். இந்த ஆண்டு கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், சபரிமலை பயணத்தின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை கேரள அரசு வகுத்துள்ளது. கீழ்கண்ட அந்த நெறிமுறைகளை தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் தவறாமல் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
* அனைத்து பக்தர்களும் காவல்துறையின் மெய்நிகர் வரிசை (Virtual Queue)-க்கான வலைவிவரப் பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும் (https://sabarimalaonline.org/).
* தொடக்கத்தில் வார நாட்களில் நாளொன்றுக்கு 1000 பக்தர்களும், வார இறுதி நாட்களில் நாளொன்றுக்கு 2000 பக்தர்களும் மட்டுமே, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
* தரிசன நேரத்திற்கு முன்னதாக 24 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட `கோவிட்-19 தொற்றின்மைச் சான்று’ பதிவுக்குக் கட்டாயமாகும். மற்றவர்களுக்கு உதவிட, நுழைவு வாயில்களில் கட்டண அடிப்படையில் ஆன்டிஜென் சோதனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
* கடந்த காலத்தில் கோவிட் தொற்று பாதிக்கப்பட்டவர்கள், 10 வயதிற்கு கீழுள்ளோரும் மற்றும் 60 வயதிற்கு மேலுள்ளோரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற பிற இணை நோயுள்ளவர்கள் எந்த வயதினரானாலும் சபரிமலை புனிதப்பயணத்திற்கு கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டார்கள்.
* காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் உள்ளவர்கள் சபரிமலை தரிசனம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்கவும்.
* பயணம் மேற்கொள்ளும் போதும் வாய் மற்றும் மூக்கை சரியாக மறைக்கும் முககவசம் அணிந்து கவனமாக இருக்க வேண்டும். பயன்படுத்தப்பட்ட முககவசத்தை பொது இடங்களில் தூக்கி எறிய வேண்டாம்.
* கைகளை அடிக்கடி சோப்பு உபயோகித்து கழுவ வேண்டும். மேலும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எப்போதும் சானிடைசர் வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தவும்.
* வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளோருக்கான (Below Poverty Line) அட்டை, ஆயுஸ்மான் பாரத் அட்டை போன்றவற்றை வைத்துள்ளவர்கள், தங்கள் பயணத்தின்போது அவற்றை உடன் கொண்டுவர வேண்டும்.
* நெய் அபிஷேகம் செய்யவும், பம்பா ஆற்றில் குளிக்கவும், சன்னிதானம், பம்பா மற்றும் கணபதி கோவில் ஆகிய இடங்களில் இரவு தங்கவும் அனுமதிக்கப்படமாட்டாது.
* எருமேலி மற்றும் வடசேரிக்கரா ஆகிய இரண்டு வழிகளில் மட்டுமே சபரிமலை புனிதப்பயணம் மேற்கொள்ள தமிழக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்”
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது..
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.