எம்.பி.ஏ., -- எம்.சி.ஏ., சேர்க்கை 18ம் தேதி துணை கவுன்சிலிங் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، نوفمبر 13، 2020

Comments:0

எம்.பி.ஏ., -- எம்.சி.ஏ., சேர்க்கை 18ம் தேதி துணை கவுன்சிலிங்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''தமிழகத்தில், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, தரவரிசை எனப்படும், ரேங்க் பட்டியல், வரும், 16ம் தேதி வெளியிடப்படும். வரும், 18 அல்லது 19ம் தேதி, கவுன்சிலிங் துவங்கும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். \தலைமைச் செயலகத்தில், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் எண்ணிக்கை, 1,300 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, 2.92 லட்சம் பேர், '108 ஆம்புலன்ஸ்' வாகனத்தில், மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கொரோனா காலத்தில், 7.96 லட்சம் பேர், மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். சென்னையில், ஆம்புலன்ஸ் ரெஸ்பான்ஸ் டைம், 8.01 நிமிடமாக உள்ளது. சர்வதேச தரத்தில் உள்ள நேரத்தை எட்டியுள்ளோம். இன்னும், 200 வாகனங்கள் வழங்க உள்ளோம். ஊபர், ஓலோ போன்ற வாகனங்களை, முன்பதிவு செய்ததும், வாகனங்கள் வருவதை, மொபைல் போனில் பார்ப்பது போல, ஆண்ட்ராய்டு மொபைலில், ஆம்புன்ஸ் வருவதை பார்க்கும் வசதி ஏற்படுத்தப்படும். 16ல் தரவரிசை மருத்துவ படிப்புக்கு, நேற்று முன்தினம் வரை, 34 ஆயிரத்து, 424 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பத்தில் தவறு இருந்தால், அதை சரி செய்து கொள்ளும்படி, தேர்வுக் குழுவிற்கு, மெயில் அனுப்பலாம். இந்த ஆண்டு, 4,061 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இது, அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. திட்டமிட்டபடி வரும், 16ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன்பின், ஓரிரு நாளில், 18 அல்லது, 19ம் தேதி, கவுன்சிலிங் துவங்கும். மருத்துவ கவுன்சிலிங், உரிய விதிமுறைகளை பின்பற்றி, நேரடியாக பெரிய இடத்தில் நடத்தப்படும். உடன் தந்தை அல்லது தாயார் அனுமதிக்கப்படுவர். சமூக இடைவெளியை பின்பற்றி, திட்டமிட்ட எண்ணிக்கை விண்ணப்பதாரர்கள் மட்டும், கவுன்சிலிங்கிற்கு வரவழைக்கப்படுவர்.சான்றிதழ்களை சரி பார்க்க, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة