7.5% ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களுக்கு புது கல்வி உதவி தொகை
* முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்
வரும் 2020-21 கல்வி ஆண்டில் புதிதாக 1990 மருத்துவப்படிப்பு இடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு நேற்று துவங்கிய நிலையில், அவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டினார்.அதில் அவர் கூறியதாவது: இந்த நாள், தமிழக வரலாற்றில் ஒரு பொன்னான நாள். அரசுப் பள்ளியில் படித்தவன் என்ற முறையில் எனக்கு மிகுந்த மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ்நாட்டிலுள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர்வது மிகவும் குறைந்து விட்டது. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 8,41,251. இதில் 41 சதவிகிதம், அதாவது 3,44,485 மாணவர்கள் 3,054 அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள். கடந்த ஆண்டு மருத்துவம் பயில வெறும் 6 மாணவர்கள் மட்டுமே தேர்வாயினர். 41 சதவிகிதம் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு, வெறும் 6 இடங்கள்தான் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதை மாற்ற வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையில் உள் ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது. இப்போது பல தடைகளை தாண்டி, சட்டமாகி, ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கி உள்ளது.
இதுவரை உங்களது குடும்பங்கள் எவ்வாறாக அடையாளப்படுத்தப்பட்டு இருந்தாலும், இனிமேல் உங்களுடைய குடும்பங்கள் மருத்துவர் குடும்பங்கள் என்றே அழைக்கப்படும். தமிழ்நாட்டில் கடந்த 2011ம் ஆண்டில் மொத்தம் 1,945 ஆக இருந்த மருத்துவப்படிப்பு இடங்கள் 2017 வரை 3,060 ஆக உயர்ந்தது. தற்போது இது 3,650ஆக உயர்ந்து உள்ளது.
மேலும் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் துவக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, 1,650 புதிய இடங்கள் 2021-22 கல்வி ஆண்டு முதல் உருவாக்கப்படும். ஆக மொத்தம் அடுத்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேருகின்ற வரை 1990 புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு வெறும் 6 இடங்கள் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த நிலையில் தற்போது 405 இடங்கள் கிடைக்கும்.மேலும், அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத் துறை பள்ளிகள் ஆகிய மாணவர்களின் ஏழ்மை நிலை மற்றும் பொருளாதார சூழ்நிலையினை கருத்திற்கொண்டு, அவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் இதர செலவினங்களால் சுமை ஏதும் ஏற்படா வண்ணம், கல்வி உதவித் தொகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மேலும் ஏழை மக்கள் நிறைந்த பகுதிகளையெல்லாம் தேர்ந்தெடுத்து, தமிழ்நாடு முழுவதும் சுமார் 2,000 மினி கிளினிக் ஆரம்பிக்கப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்மினர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்த 8 பேருக்கு மருத்துவ படிப்பில் இடம் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்த 8 பேருக்கு மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இடஒதுக்கீடு மூலம் சென்னை மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது.
இதன்படி புல்லா அவின்யூ சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த சங்கவி, ரித்திகா ஆகியோருக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியிலும், நந்திதாவிற்கு ஓமந்தூரார் மருத்துவ கல்லூரியிலும், சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சரண்யா மற்றும் ஜெயபிரதாவுக்கு ஓமந்தூரார் மருத்துவ கல்லூரியிலும், தரமணி சென்னை மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த காயத்ரிக்கு செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியிலும், மார்க்கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மஜிதா தஜினுக்கு தேனி மருத்துவ கல்லூரியிலும், எம்.எச். சாலை ெசன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் ேசர்ந்த செளமியாவுக்கு செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.