ஓமியோபதி பட்டமேற்படிப்பு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 30ம் தேதி வரை கால நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 21, 2020

Comments:0

ஓமியோபதி பட்டமேற்படிப்பு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 30ம் தேதி வரை கால நீட்டிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை வெளியிடப்பட்ட அறிக்கை: 2020-21ம் கல்வியாண்டிற்கான கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவக் கல்லூரி (மொழி சிறுபான்மையினர் சுயநிதி) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் ஆத்தூரில் உள்ள ஓயிட் மெமோரியல் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி (மத சிறுபான்மையினர் சுயநிதி)-ல் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, ஓமியோபதி மருத்துவத்திற்கான AIAPGET 2020-ல் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து, இணையவழி, மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 19.10.2020 அன்று முதல் வரவேற்கப்பட்டன. விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை அலுவலக வலைதளமான www.tnhealth.tn.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்ய மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் பெறுவதற்கான கடைசி நாட்கள் முறையே 20-11-2020 மற்றும் 23-11-2020-லிருந்து 27.11.2020 முடிய மாலை 5 மணி மற்றும் 30.11.2020 முடிய மாலை 5.30 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரமான வலைதள அறிவிக்கை, மேற்கண்ட எம்.டி. (ஓமியோபதி) பட்ட மேற்படிப்பிற்கான சுயநிதி மொழி, மத சிறுபான்மையினர் மருத்துவக் கல்லூரிகளின் விவரம், தகவல் தொகுப்பேடு, விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்ப பதிவிறக்கம் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதிமுறைகள், படிப்புகளின் விவரம், கல்விக்கட்டணம் மற்றும் இதர விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்தை காணலாம். கடைசி நாள் 27.11.2020 மாலை 5 மணி வரை. பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் தபால், கூரியர் சேவை வாயிலாக பெறவோ, நேரில் சமர்ப்பிக்கவோ வரும் 30ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews