தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், அண்ணா பல்கலையில், அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. அண்ணாமலை பல்கலையில், பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளன.
தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை பொறுத்தவரையில், அண்ணா பல்கலை, தன்னாட்சி கல்லுாரிகள், அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை சராசரியை எட்டியுள்ளது. தனியார் கல்லுாரிகள் மற்றும் அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.
'டாப்' கல்லுாரிகள்
அண்ணா பல்கலையின், சென்னை வளாக கல்லுாரிகளான, கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரி ஆகியவற்றில் மட்டும், 100 சதவீத இடங்களும் நிரம்பியுள்ளன.தமிழக போக்குவரத்து துறை நடத்தும், ஈரோட்டில் உள்ள போக்குவரத்து தொழில்நுட்ப கல்லுாரியிலும், கோவை அண்ணா பல்கலை வளாக கல்லுாரி, கோவை அரசு இன்ஜி., கல்லுாரி ஆகியவற்றிலும், அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
தமிழ் வழிக்கு ஆர்வம் குறைவு
அண்ணா பல்கலையின், உறுப்பு கல்லுாரிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம், திண்டிவனம், ஆரணி, திருச்சியில் மட்டும், அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரிகளில், தமிழ் வழி இடங்களில், 75 சதவீதம் வரை காலியாக உள்ளன.அரசு இன்ஜி., கல்லுாரிகளிலும், 60 சதவீதத்துக்கு மேல் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தன்னாட்சி கல்லுாரிகள் பெரும்பாலானவற்றில், 70 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. அண்ணாமலையில் சரிவு
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, ஈரோடு, திருச்சி மாவட்ட கல்லுாரிகளில், அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மற்ற மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளாக, தமிழக அரசின் கவுன்சிலிங்கில் தான் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அரசு பல்கலையாக இருந்தாலும், நிர்வாக ஒதுக்கீடுபோல், அதிக கட்டணம் வசூலிப்பதால், மாணவர்கள் சேர்வதில் ஆர்வம் குறைந்துள்ளனர்.அண்ணாமலை பல்கலையில், 'கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்' பாடப் பிரிவுகளை தவிர, மற்றவைகளில் பெரும்பாலான இடங்கள் காலியாகவே உள்ளன.
50 கல்லுாரிகளில் ஒற்றை இலக்கம்
இந்த ஆண்டு, 50க்கும் மேற்பட்ட தனியார் கல்லுாரிகளில், ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 20 கல்லுாரிகளில், ஒரு மாணவர் கூட சேரவில்லை என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் பறிபோகும் ஆபத்து உள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.