DSE - வழக்குகள் - பள்ளிக்கல்வி - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் - Integrated Financial Human Resource Management Systems (IFHRMS) முறையில் ஊதியப்பட்டியல் தயாரித்தல் - பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் இடைக்கால ஆணையினை செயல்படுத்துதல் - சார்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நகஎண். 0012/PA/JDS/2018 நாள். 08.09.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 09, 2020

DSE - வழக்குகள் - பள்ளிக்கல்வி - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் - Integrated Financial Human Resource Management Systems (IFHRMS) முறையில் ஊதியப்பட்டியல் தயாரித்தல் - பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் இடைக்கால ஆணையினை செயல்படுத்துதல் - சார்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நகஎண். 0012/PA/JDS/2018 நாள். 08.09.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 6.
நகஎண். 0012/PA/JDS/2018 நாள். 08.09.2020
பொருள் வழக்குகள்-பள்ளிக்கல்வி- அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் - Integrated Financial Human Resource Management Systems (IFHRMS) முறையில் ஊதியப்பட்டியல் தயாரித்தல் - பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் இடைக்கால ஆணையினை செயல்படுத்துதல் - சார்பாக, பார்வை 1. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் கடிதம் எண். 012/P A/JDS/2018 நாள். .09.2018
2. சென்னை உயர்நீதிமன்ற WP No. 33092 of 2018 நாள். 13.12.2018 WPNo. 2571 of 2019 நாள், 30.01.2019 மற்றும் WP No. 8739 of 2020 நான், 03.07.2020 பல்வேறு வழக்குகளிலிருந்து பெறப்பட்ட தீர்ப்பாணைகள்.
தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியம் Integrated Financial Human Resource Management Systems (IFHRMS) திட்டத்தின் கீழ் ஊதியப் பட்டியல் தயாரித்து அதை சரிபார்ப்பதற்கு சம்பந்தப்பட்ட பள்ளியில் பணியாற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மூலம் தலைமை ஆசிரியர்கள் வழியாக சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஒப்புதல் வழங்க வேண்டுமென பார்வை 1-ல் காணும் கடிதம் வாயிலாக சம்பந்தப்பட்ட கருஆல கணக்கு ஆணையருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து உதவிபெறும் பள்ளிகளின் நியமன அலுவலரான சம்பந்தப்பட்ட பள்ளித் தாளாளர் /செயலர்கள் பார்வை1-ல் காணும் செயல்முறையினை இரத்துச் செய்யக் கோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு பார்வை-1ல் காணும் இவ்வியக்க கடிதத்திற்கு இடைக்கால தடையாணை பெற்றுள்ளார்கள். இந்நிலையில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1973-மற்றும் விதிகள் 1974-ன்படி உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் இதர பணப்பயன்கள் வழங்கிட நியமன அலுவலரான சம்பந்தப்பட்ட பள்ளித் தாளாளர் / செயலர் ஆவார். இந்நிலையில், பார்வை 2ல் கண்டுள்ள நீதிமன்ற வழக்குகளில் பெறப்பட்ட இடைக்கால ஆணையிணை செயல்படுத்த கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. நீதிமன்ற இடைக்கால ஆணையிணை செயல்படுத்தும் பொருட்டு ஏற்கனவே உள்ளவாறு IFHRMS திட்டத்தின் கீழ் ஊதியப் பட்டியல் தயாரிக்க அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது,
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews