கொரோனா விடுப்பை காட்டி, 'ஆன்லைன் டியூஷன்' எடுப்பதில், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இதனால், அரசு பள்ளி மாணவர்கள் பரிதவிக்கின்றனர்.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சியில், பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. ஆனால், பல இடங்களில் கல்வி, 'டிவி' தெளிவாக தெரிவதில்லை.
அரசு கேபிள் இல்லாமல், தனியார் இணைப்பு பயன்படுத்துவோருக்கு, கல்வி, 'டிவி' கிடைப்பதில்லை.இந்நிலையில், பிளஸ் 2 பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள், கடும் அவதிக்கு ஆளாகிஉள்ளனர். பொது தேர்வுக்கு, ஆறு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இன்னும் காலாண்டுக்கான பாடங்கள் கூட நடத்தப்படவில்லை.
அதேநேரம், அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர்களில் பலர், தங்கள் பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்கு பதில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, 'டியூஷன்' எடுப்பதில், 'பிசி'யாக உள்ளனர்.பள்ளிகளை திறக்கும் முன், 'டிஜிட்டல்' வழியில், பெரும்பாலான பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்ற வகையில், ஆன்லைனில் முழு நேர டியூஷன் நடத்தி வருவதாக, புகார் எழுந்துள்ளது.
பாடம் நடத்த ஏற்பாடு செய்யுமாறு, பெற்றோர் கோரிக்கை விடுத்தாலும், ஆசிரியர்களை கண்காணித்து, மாணவர்களின் நலனில் செயல்பட வேண்டிய பள்ளி கல்வி இயக்குனரகம், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கி விட்டு, மவுனமாக உள்ளது.
சிறு குழுவாக மாணவர்களை, பள்ளிக்கோ, தங்கள் வீட்டுக்கோ வரவழைத்து, பாடம் நடத்துவது குறித்து, உரிய ஆலோசனை மேற்கொள்ளாமல், அலட்சியமாக உள்ளதாக, பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.