பாலிடெக்னிக் இறுதி ஆண்டு பருவத் தேர்வு வீட்டிலிருந்தே எழுத தயாராக இருக்க அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 15, 2020

பாலிடெக்னிக் இறுதி ஆண்டு பருவத் தேர்வு வீட்டிலிருந்தே எழுத தயாராக இருக்க அறிவுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பாலிடெக்னிக் மாணவர்கள் இறுதி ஆண்டு பருவத் தேர்வை வீட்டிலி ருந்து எழுத தயாராக இருக்க வேண்டும் என கல்லூரிகள் அறிவுறுத்தியுள்ளன. தமிழகத்தில் கரோனா தொற்று அச்சம் காரணமாக உயர்கல்வியில் 1, 2, 3-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கு பருவத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், கடந்த கல்வி ஆண்டின் ஏப்ரல் - மே பருவத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களும் (அரியர் பாடங்கள் உட்பட) தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இறுதி ஆண்டு மாணவர்கள் பருவத் தேர்வுகளை கட்டாயம் எழுத வேண் டும் என்று உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு செப்.30-ம் தேதிக் குள் பருவத் தேர்வு நடத்த பல் கலைக்கழக மானியக் குழு கல்வி நிறுவனங்களை அறிவுறித்தியி ருந்தது. இதனால், பொறியியல், கலை அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்த உயர்கல்வித் துறை ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில், அரசு பாலிடெக் னிக் கல்லூரிகள் சார்பாக மாணவர் களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
மூன்றாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்கள் தாங்கள் எழுத வேண்டிய எழுத்து, செய்முறை, திட்ட கட்டுரை என அனைத்து தேர்வுகளையும் இணையவழியில் வீட்டிலிருந்தே எழுத அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கான தேதிகள், நேர அட்டவணை, வினாத்தாள் பதிவிறக்கம், தேர்வு எழுதும் முறை, தேர்வு தாளை திரும்ப சமர்ப்பிக் கும் முறை ஆகியவை குறித்து விரைவில் தகவல் வெளியிடப்ப டும். மாணவர்கள் இணையவழி யில் குறிப்பிட்ட கால இடைவெளி யில் தேர்வு எழுதி, தேர்வுத் தாளை சமர்ப்பிக்க ஏதுவாக தங்களை தயார்படுத்திக் கொள்ள அறிவுறுத் தப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த இறுதி ஆண்டு இணைய வழி பருவத் தேர்வை ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் மாணவர்கள் எழுதவுள்ளனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews