ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் II-க்கான - எழுத்து தேர்வுக்கு வினாவங்கி தயார் செய்திடும் மந்தனப் பணிக்கு முதுகலை ஆசிரியர் பெயர் பட்டியல் கோருதல் - சார்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 06, 2020

ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் II-க்கான - எழுத்து தேர்வுக்கு வினாவங்கி தயார் செய்திடும் மந்தனப் பணிக்கு முதுகலை ஆசிரியர் பெயர் பட்டியல் கோருதல் - சார்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ந.க.எண்.6155/61/2020
நாள், 04.09.2020
//ஆசிரியர் தேர்வு வாரியம் மிக மிக அவரசம்//
முதன்மைக் கல்வி அலுவலகம்
கடலூர்

பொருள்:
ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் II-க்கான - எழுத்து தேர்வுக்கு வினாவங்கி தயார் செய்திடும் மந்தனப் பணிக்கு முதுகலை ஆசிரியர் பெயர் பட்டியல் கோருதல் - சார்பு.
சென்னை-06, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் அவர்களின் ந.க.எண்.3904/எப்1/2020 நாள்.01.09.2020.. பார்வை:
பார்வையில் காணும் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் அவர்களின் கடிதங்களின் மீது அரசு | அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர்களின் உடனடி கவனம் ஈர்க்கலாகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் -1|க்கான எழுத்து தேர்வுக்கு வினா வங்கி தயார் செய்திடும் மந்தனப் பணிக்கு தங்களது பள்ளியில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களில் கீழ்காணும் தகுதியின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்து தெரிவு செய்த ஆசிரியர்களின் பெயர்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் ceocuddalore@gmail.com முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் ஒப்பமிட்ட நகலினை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலரிடம் 09.09.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு அரசு/அரசு நிதியுதவி பெறும் மேல் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கீழ்கண்ட தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்களை தெரிவு செய்திடல் வேண்டும்.
1. சார்ந்த ஆசிரியர் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

2 கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளுக்கு பாடம் நடத்துபவர்களாக இருத்தல் வேண்டும்.

3. சார்ந்த ஆசிரியர்களால் பாடம் நடத்தப்பட்ட வகுப்புகளில் மாணவர்கள் குறைந்த பட்சம் 90சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

4. மந்தன பணி என்பதால் மிகுந்த நம்பகத்தன்மை வாய்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

5, சார்ந்த ஆசிரியர்கள் மீது எவ்வித குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை இருத்தல் கூடாது.

இணைப்பு- படிவம்.
ஓம்!- கா.ரோஸ் நிர்மலா
முதன்மைக்கல்வி அலுவலர்
கடலூர். பெறுதல் அரசு அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், கடலூர் மாவட்டம், நகல்- மாவட்டக்கல்வி அலுவலர்கள், கடலூர் வடலூர்/சிதம்பரம் விருத்தாசலம். தங்களது ஆளுகைக்குட்பட்ட அரசு/அரசுநிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து பெறப்படும் படிவங்களை தொகுத்து அதன் மீது பள்ளிகளின் பெயர் பட்டியல் மற்றும் எந்த பள்ளியின் படிவமும் விடுபடவில்லை என என்றுடன் 10.09 2020 அன்று மாலைக்குள் இவ்வலுவலக அ1 பிரிவு எழுத்தரிடம் நேரடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.)
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews