'இலவச மாணவர் சேர்க் கையில், தவறான சான்றிதழ்அளித்தால், அவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்படும்' என, பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.
கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் சேர்க்கப் படுகின்றனர்.
ஒவ்வொரு பள்ளியிலும் நுழைவு நிலையில் உள்ள, எல்.கே.ஜி., மழலையர் வகுப்பு அல்லது ஒன்றாம் வகுப்பில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான, 'ஆன்லைன்' பதிவு ஆக., 27ல் துவங்கியது; வரும், 25ல் முடிகிறது.இந்நிலையில், விண்ணப்பித்த மாணவர்களை தேர்ந்தெடுக்கும் குழுவுக்கு, மெட்ரிக் கல்வி இயக்குனர் கருப்பசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பதிவு செய்துள்ள மாணவர்களின், வயது சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், வருமானம் மற்றும் ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் உண்மை தன்மையை சரிபார்க்க வேண்டும். தவறான சான்றிதழ் வழங்கியதாக தெரிய வந்தால், மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்படும்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.