புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரையை அடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர் கல்வி அமைச்சகம் என அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. துறையின் சமூக வலைதளங்களிலும் பெயர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய புதிய கல்விக் கொள்கைக்குக் கடந்த ஜூலை 29-ம் தேதியன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர் கல்வி அமைச்சகம் என மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அமைச்சரவையின் பெயர் இன்று மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் கல்வி அமைச்சகம் என்று மாற்றப்பட்டுள்ளது. அதேபோல கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் எனவும் கல்வித்துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
எனினும் கல்வி அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதள முகவரிக்கான யுஆர்எல் இன்னும் மாற்றப்படவில்லை. mhrd.gov.in. என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்திலும் தனது சுயவிவரக் குறிப்பை மாற்றியுள்ளார். அதில், மத்தியக் கல்வி அமைச்சர், இந்திய அரசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.