தமிழகத்தில் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள் தவிர இதர தனியார் சுயநிதிப் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நுழைவு வகுப்பில் 25 சதவீத இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
இதற்காக rte.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் செப்டம்பர் 25ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். தமிழகத்தில் உள்ள 8 ஆயிரத்து 628 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 771 இடங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். அதில் அதிகபட்மாக வேலூரில் 617 பள்ளிகளில் 8 ஆயிரத்து 62 மாணவர்களும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 84 பள்ளிகளில் 873 மாணவர்களும் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர் என்ற விவரங்கள் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கண்ட 25 சதவீத ஒதுக்கீட்டின்படி மாணவர்களை சேர்க்க அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களில் சேர்க்கைக்கு தகுதி பெற்ற மாணவர்களின் பட்டியல் செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் அக்டோபர் 3ம் தேதி வெளியிடவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups