இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு : இணையவழி புத்தாக்கப் பயிற்சியை அளித்து, TET நிபந்தனைகளிலிருந்து விலக்கு தந்து விரைந்து அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு வேண்டுகோள்
RTE Act அடிப்படையில் 23/08/2010 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெறுபவர்கள் TET கட்டாயம் என்ற சூழல் உள்ளது.
தமிழகத்தில் RTE அமலாக்கம் அரசாணை எண் 181 அடிப்படையில் இருந்தாலும், தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரின் 16/11/2012 ஆம் தேதியிட்ட செயல்முறைகள் அடிப்படையில் TET கட்டாயம் என்ற நிபந்தனைகள் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
அதனால் 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட சுமார் 1700 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் TET கட்டாயம் எனவும் , (அரசு பள்ளிகள் மற்றும் மைனாரிட்டி பள்ளிகள் ஆசிரியர்களுக்கும் TET தேவை இல்லை என்று கூறப்படுகிறது)
23/8/10 முதல் 16/11/12 வரையில் TET பற்றிய புரிதல் இன்றி பணி நியமனத்திற்கு அனுமதி அளித்த அனைத்து அதிகாரிகளினால், தற்போது வரை சுமார் 1700 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட சூழல் ஒருபுறம் இருக்க,
TET நிபந்தனைகளில் கொண்டு வரப்பட்ட ஆசிரியர்கள் ஏறக்குறைய பத்து ஆண்டுகள் பணிநிறைவு பெறும் சூழலிலும், இன்றும் மன வருத்தத்திலேயே பணிபுரிந்து வருகின்றனர்.
பல்வேறு சிக்கல்கள் நிறைந்த இந்த TET பிரச்சினைகளை களையும் விதமாகவும், பணியில் உள்ள (TET சிக்கலில் உள்ள) ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வண்ணம் தமிழக அரசு பாதுகாப்பு தரும் எனவும், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அல்லது சிறப்பு தேர்வு விரைவில் நடத்தப்படும் எனவும் கடந்த பிப்ரவரி மாதம் மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்தார். அதன் பிறகுதான் இந்த TET சிக்கலில் இருந்த ஆசிரிய குடும்பங்கள் சற்றே நிம்மதியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆயினும் இன்று வரை முழுமையான அரசானை பிறப்பிக்கப்படவில்லை.
தற்போது 23/08/2010 முதல் 24/08/2020 வரையிலான காலகட்டம் மொத்தமாக பத்து ஆண்டுகள் நிறைவுற்றதால் தேர்வு நிலை ஆசிரியர்களாக தரம் உயர்கின்றனர்.
வளரூதியம், ஊக்க ஊதியம் உள்ளிட்ட ஊதியப் பலன்கள் நிறுத்தக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்தும் கூட, மாநிலம் முழுவதும் சமமற்ற முறையில் தரப்படுகின்றன.
பெரும்பாலான ஆசிரியர்களின் பதவி உயர்வுகள் தகவல்கள் இன்றி தேங்கி நிற்கின்றன. உயர்கல்வி படிக்ககூட அனுமதி மறுக்கப்படுவது உள்ளிட்ட பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர் இந்த TET நிபந்தனை ஆசிரியர்கள்.
ஆகவே விரைவில்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களும் கொள்கை முடிவு செய்து நல்ல அறிவிப்பு வெளிவிடும் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.
RTE - TET சிக்கல் சரிசெய்யும் பொருட்டு தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் உள்ள அனைவருக்கும் விரைவில் Online மூலம், சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு அளித்தது போல, TET புத்தாக்கப்பயிற்சி அளித்து TET லிருந்து முழுவதும் விலக்கு அளிக்க கொள்கை முடிவினை மாண்புமிகு தமிழக கல்வித் துறை அமைச்சகம் மேற்கொண்டால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதுகாப்பு பெறும்." என TNASA தமிழக அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups