பள்ளி மாற்றுச் சான்றிதழை காண்பித்து மாணவர்கள் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளைத் தொடர்ந்து அறிவித்து வருகிறது தமிழக அரசு. எனினும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு இ பாஸ் பெறுவதைக் கட்டாயமாக்கியுள்ளது அரசு. திருமணம், துக்க நிகழ்வுகள், மற்றும் அவசர மருத்துவச் சிகிச்சை ஆகிய காரணங்களுக்காக மட்டும் இ பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நியாயமான முறையில் இ பாஸ் கேட்டு விண்ணப்பிக்கும் 90% பேருக்கு நிராகரிப்படுகிறது. அதுவே பணம் பெற்றுக்கொண்டு சிலர் மிக எளிதாக இ பாஸ் வாங்குவதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அவர்களுக்கான கல்லூரிச் சேர்க்கைகள் தொடங்கிவிட்டன. ஆனால் இ பாஸ் கிடைக்காததாதல் வெளியூர்களில் இருக்கும் மாணவர்களால் சென்னையில் இருக்கும் கல்லூரிகளில் சேரமுடியாத சூழல் நிலவி வருகிறது. எனவே இ-பாஸ் முறையில் மாணவர்களுக்கான படிப்பு மற்றும் கல்லூரிச் சேர்க்கை தொடர்பாக விஷயங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் எனக் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி மாற்றுச் சான்றிதழை காண்பித்து மாணவர்கள் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார். மேலும், அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை 17ம் தேதி தொடங்கலாம். அரசுப் பள்ளிகளில் மதிப்பெண் குளறுபடிகள் ஏற்படவில்லை, என கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.