ஒவ்வொரு ஆண்டும் வள்ளல் பாண்டித்துரையின் நினைவினைப் போற்றும் வகையில் தமிழ்மொழியில் பற்பல போட்டிகளை வேலம்மாள் நெக்ஸஸ் நடத்தி வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் அவரது நினைவினைப் போற்றும் வகையில் பள்ளி மாணவர்களுக்கிடையே சர்வதேச அளவில் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இணையம் வழியாக இந்தப் போட்டியை உலகம் முழுவதிலுமிருந்தும் 5 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் பங்கேற்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ள இணையம் வழி பதிவு செய்வதற்கான கடைசி தேதி 21 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை.
போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் நிகழ்ச்சியின் வீடியோ பதிவுகளை இணையம் வழி சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி, பேச்சுப் போட்டி ஆகஸ்ட் 26, பரதநாட்டியப் போட்டி ஆகஸ்ட் 27, கர்நாடக இசைப் போட்டி ஆகஸ்ட் 28. இந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறும் மாணவர்களுக்கு மொத்தம் ரூ.4 லட்சத்திற்கும் மேல் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு, www.velamalnexus.com என்ற வலைத்தளத்தைப் பார்வையிடவும். அல்லது onlineevents@velamalnexus.com -க்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது 7358390402 என்ற கைபேசி எண்ணை அழைக்கவும் என பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups