புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆக.3 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்; 17-ம் தேதி முதல் வழக்கமான வகுப்புகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 03, 2020

Comments:0

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆக.3 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்; 17-ம் தேதி முதல் வழக்கமான வகுப்புகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகின்றன. ஆகஸ்ட் 17 முதல் வளாகம் திறக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகப் பதிவாளர் சித்ரா செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள உத்தரவு விவரம்: ''ஆன்லைன் வகுப்புகளுடன் அனைத்துப் பல்கலைக்கழகத் துறைகள், மையங்கள் ஆகியவற்றுக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் கல்வி அமர்வு தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் மாணவர்களுக்கு வளாகத்தைத் திறக்க வாய்ப்புள்ளது. தொற்று நிலை மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவுகளைப் பொறுத்து வளாகத்திற்குள் நுழைவதற்கான முறைகள் மற்றும் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் வழக்கமான வகுப்புகளைத் தொடங்குவது குறித்து சரியான நேரத்தில் தெரிவிக்கப்படும். பல்கலைக்கழக இணையதளத்தில் தொடர்ந்து இது தொடர்பான விவரங்கள் பதிவிடப்படும். பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் இணையத்தில் அடுத்தகட்டத் தகவலை அறியலாம்''. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews