தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்: தொழிலாளர் கல்வி நிலையம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 21, 2020

Comments:0

தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்: தொழிலாளர் கல்வி நிலையம் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் நடத்தும் தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் அறிவித்துள்ளார். இதுகுறித்து தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: CLICK HERE TO DOWNLOAD PDF தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டப்படிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப் படிப்பு), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டயப் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகிறது. பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ ஆகிய பட்ட / பட்ட மேற்படிப்பு / பட்டயப் படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித்தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர்கள் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD PDF இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்களைப் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக நியமனம் செய்ய, மாணவர்களைத் தேர்வு செய்து, பணி நியமன உத்தரவு வழங்குகிறார்கள். இதன்படி, பல்வேறு மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவளத் துறையில் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் அலுவலர் (தற்போது தொழிலாளர் உதவி ஆணையர்) மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு பி.ஏ.(தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ. ஆகிய பட்ட, பட்ட மேற்படிப்பு / பட்டயப் படிப்புகளை முன்னுரிமைத் தகுதிகளாக நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டப்படிப்பிற்கான விண்ணப்பத்தினைப் பெற tilschennai@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் பெயர், தொலைபேசி எண், முகவரி மற்றும் மின்னஞ்சல் விவரங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD PDF இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.200 ஆகும். பட்டியல் இனத்தவர் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும் (சாதிச் சான்றிதழ் நகல் தாக்கல் செய்யவேண்டும்). பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 05.08.2020 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், விண்ணப்பக் கட்டணத்திற்கான ரூ. 200/- 100/- (SC/ST) வங்கி வரைவோலையினை, Tamilnadu Institute of Labour Studies, Chennai - 5 என்ற பெயரில் எடுத்து பதிவுத் தபால் அல்லது விரைவு அஞ்சல் அல்லது கொரியர் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். CLICK HERE TO DOWNLOAD PDF
மேலும் விவரங்களுக்கு : ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை)
முனைவர் இரா,ரமேஷ்குமார், (உதவிப் பேராசிரியர்),
தொடர்பு எண்: . 9884159410,
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்,
எண்.5 காமராசர் சாலை, சென்னை - 600 005.
தொலைபேசி எண்.044 - 28440102 / 28445778.
email: tilschennai@tn.gov.in
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews