ஜூன் 15-ம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 08, 2020

Comments:0

ஜூன் 15-ம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொது முடக்கக் காலத்தில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 15-ம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என்று கருத்துக் கூறியுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை வரும் ஜூலை 2 ஆவது வாரத்தில் நடத்தலாமா என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், இதுகுறித்து அரசின் கருத்தை கேட்டுத் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை பிற்பகல் 2.30 மணிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பக்தவச்சலம் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்த பொதுத் தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 9 லட்சத்து 79 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். மேலும் 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 41 ஆயிரம் மாணவர்களும், பொதுமுடக்கம் காரணமாக தேர்வு எழுத முடியாத 36 ஆயிரத்து 89 மாணவர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வையும் எழுத உள்ளனர். மேலும் இந்த தேர்வுக்கான பணிகளில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 623 ஆசிரியர்களும், 22 லட்சத்து 43 ஆயிரம் ஆசிரியரல்லாத பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு பொதுத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. எனவே வரும் ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்ற உள்ளதாக அறவிக்கப்பட்டுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த பொதுத் தேர்வை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜூன் 15 ஆம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது. 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது. கரோனா தொற்று பரவல் குறைந்த பின் 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தலாம் என கருத்து தெரிவித்து, வரும் ஜூலை 2 ஆவது வாரத்தில் தேர்வு நடத்தலாமா என்பது குறித்து அரசின் கருத்தை கேட்டுத் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்தனர் மேலும், இன்றைய விசாரணைக்கு அரசு தலைமை வழக்குரைஞர் 2.30 மணிக்கு ஆஜராகவில்லை என்றால், 10ம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு தடை விதிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.முன்னதாக, மாணவர்கள், ஆசிரியர்கள் நலனில் தமிழக அரசு எவ்வாறு ரிஸ்க் எடுக்கிறது. 9 லட்சம் மாணவர்கள் வாழ்க்கை தொடர்பான விஷயம் இது. பொது முடக்கக் காலத்திலேயே பொதுத் தேர்வை நடத்த வேண்டியதற்கு அவசியம் உள்ளது என நினைக்கிறீர்களா என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அடுத்தடுத்த கேள்விகளை எழுப்பியிருந்தது.மேலும், பள்ளிகள் திறப்பதை ஜூலையில் முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசின் தெரிவித்திருக்கும் நிலையில், அதனை மீறி, ஜூன் மாதத்தில் பொதுத் தேர்வு நடத்தப்படுவது ஏன்? கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொதுமுடக்கக் காலத்தில் மத்திய அரசின் அறிவுறுத்தல்களை தமிழக அரசே மீறலாமா?லட்சக்கணக்கான மாணவர்கள் நலனில் எப்படி ரிஸ்க் எடுப்பீர்கள்? என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.மேலும், தமிழக முதல்வர் பழனிசாமியுடன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் லட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் நலனில் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும் என்றும் மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜூன் 15ம் தேதி முதல் பொதுத் தேர்வு கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இத்தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி, தமிழ்நாடு உயர் நிலை, மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பக்தவத்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் வழக்கு அந்த மனுவில், பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து, பெற்றோர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்காமல் ஜூன் 15ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மேலும் மாணவர்கள், ஆசிரியர்களின் ஆரோக்கிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஊரடங்கால் விடுதிகளில் புத்தகங்களை விட்டுச் சென்ற மாணவர்களால் தேர்வு எழுதுவது கடினம் என்பதால் 15 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பினர்.
நீதிபதிகள் : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன்?. தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பது.
நீதிபதிகள் : லட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் நலனில் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும்?
நீதிபதிகள் : பத்தாம் வகுப்பு தேர்வை ஒரு மாதம் வரை ஏன் தள்ளி வைக்க கூடாது? மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நீதிபதிகள் : கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கவனிக்கவில்லையா? 9 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விஷயம்
நீதிபதிகள் : 9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், காவல்துறை, வருவாய்த்துறையினரை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்க வேண்டுமா?
நீதிபதிகள் : பொது முடக்க காலத்திலேயே 10ம் வகுப்பு தேர்வை நடத்த என்ன அவசியம் உள்ளது என நினைக்கிறீர்கள் ?
நீதிபதிகள் : பள்ளிகள் திறப்பதை ஜூலையில் முடிவெடுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை மீறுவீர்களா ?
10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15ல் நடத்த ஏன் தடை விதிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பிய நிலையில் அரசு தலைமை வழக்கறிஞரை ஆஜராக கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்
REAKING NEWS: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வை மீண்டும் தள்ளிவைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல். சிபிஎஸ்இ தேர்வுடன் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வை  ஜூலை 1ம் தேதி முதல் நடத்த தமிழக அரசு முடிவு என தகவல் பத்தாம் வகுப்பு தேர்வு: 10 நிமிடத்தில் முடிவு எடுக்காவிட்டால் தேர்வை ஒத்திவைத்து உத்தரவிட நேரிடும்: நீதிபதிகள் பிற்பகல் 2.30 மணிக்குள் பதிலளிக்க உத்தரவு. ஜூன் 15ல் பத்தாம் வகுப்புத் தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது. தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 9 லட்சம் மாணவர்கள் 3 லட்சம் ஆசிரியர்கள் காவல்துறை வருவாய்த்துறை துறையினரை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்க வேண்டுமா? நீதிபதிகள் கேள்வி. லட்சக்கணக்கான மாணவ மாணவியரின் நலனில் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த அவசரம் காட்டுவது ஏன்? - உயர்நீதிமன்றம். பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews