பேரிடர்க் காலங்களை பள்ளிகள் எதிர்கொள்வது எப்படி?- 18 ஆலோசனைகளைப் பட்டியலிட்ட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 25, 2020

Comments:0

பேரிடர்க் காலங்களை பள்ளிகள் எதிர்கொள்வது எப்படி?- 18 ஆலோசனைகளைப் பட்டியலிட்ட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பேரிடர்க் காலங்களை பள்ளிகள் எதிர்கொள்வது பற்றியும் கற்றல்-கற்பித்தல் பணி நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளிக் கல்வித்துறைக்குக் கருத்துருக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
1.கரோனா தொற்று குறையும் தன்மையைப் பொறுத்து ஜூலை 2-ம் தேதி வாக்கில் பள்ளிகளைத் திறக்கலாம்.
2.வாரம் முழுவதும் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும். அதே நேரத்தில் பாதுகாப்பு கருதி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பள்ளிகள் இயங்க பகுதி நேரப் பள்ளிகளாக (SHIFT SCHOOL) மாற்றியமைக்கலாம். (பேரிடர்க் காலத்தில் மட்டும்)
3.உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை காலையும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாலையும் இயங்கலாம். (பள்ளி வேலை நேரம் தவிர்த்து ஆசிரியர்கள் இணையம் வழியாக மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கலாம்.)
4.தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பகுதிநேரப் பள்ளிகள் செயல்படலாம். 5. தமிழ்நாட்டில் பேரிடர்க் காலங்களில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வியைச் சீரமைப்பது குறித்த தொடர் பயிற்சி முக்கியம்.
6. ஆறாம் வகுப்பு முதல் ஒளி- ஒலிக் காட்சி (Audio-Visual) வகுப்புகள் நடத்தப்படவேண்டும். தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வதோடு தன்னம்பிக்கையையும் வளர்க்கும் கல்வி அமைய வேண்டும்.
7. அனைத்துப் பள்ளிகளிலும் வைஃபை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைத்திடவேண்டும்.
8. தினம் ஒரு பாடவேளை மாணவர்களை சுய வழிக் கற்றலில் ஈடுபடுத்த வேண்டும் .பள்ளிகளிலேயே வாரம் ஒருமுறை இணையவழித் தேர்வுகள் நடத்த வேண்டும்.
9. ஆறாம் வகுப்பு முதல் கையடக்கக் கணினி வழங்கவேண்டும்.
10. 10 மற்றும் 12 -ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை இணைய வழியில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
11. பொதுத்தேர்வில் 60 மதிப்பெண்களை இணையவழித் தேர்வாகவும் (OMR SHEET) 30 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வு,10 மதிப்பெண்கள் மதிப்பீடு எனவும் பிரித்து வைக்கலாம். 12.பெரும்பாலான நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் இணையம் வழியாக நடத்தப்படும் சூழலில் தொடர் பயிற்சியே தன்னம்பிக்கையோடு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள உதவும். (அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடியாமல் போவதற்கு இணையப் பயிற்சி இல்லாததும் முக்கியக் காரணம்.
13. மாநிலம் முழுவதும் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கையை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
14.கற்றல்-கற்பித்தல் பணி தடையில்லாமல் நடைபெற ஆசிரியர்களுக்கு அத்தியவாசியப் பணிகள் தவிர (தேர்தல் பணி) மற்ற பணிகள் வழங்குவதைத் தவிர்க்கவும். 15.மாணவர்களுக்கு முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதியினை உறுதி செய்வதுடன் பள்ளிகளில் சுகாதார வசதியை மேம்படுத்த வேண்டும்.
16.ஆசிரியர்கள் மன உளைச்சலின்றி பணிபுரிய, இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.
17. அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25% மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அரசு தேர்வு செய்து தருவதைத் தவிர்க்கவும். மாறாக சரியான முறையில் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்களா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும்.
18.இணையவழியில் பாடம் நடத்த அரசே புதிய செயலியை உருவாக்கலாம். ( tnschl App)

இவ்வாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், கற்றல்-கற்பித்தல் பணி ஆய்வுக்குழுத் தலைவருக்கும், கல்வித் துறைக்கும் தனது கருத்துருக்களைச் சமர்ப்பித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews