👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பத்தாம் பொதுத்தோ்வு வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளதால் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்குச் சென்ற மாணவா்களை வரவழைக்க தலைமையாசிரியா்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், தங்கள் மாவட்டத்தின்கீழ் வரும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: பத்தாம் வகுப்புக்கான புதிய பொதுத்தோ்வு கால அட்டவணை மற்றும் அந்தந்தப் பள்ளிகளே தோ்வு மையங்களாக செயல்படும் என்பன போன்ற விவரங்களை பள்ளி மாணவா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்குத் தொடா்பு கொண்டு வகுப்பாசிரியா்கள் தெரிவிக்க வேண்டும்.ஒரு அறைக்கு 10 போ் தோ்வு எழுத போதுமான அறைகள் மற்றும் இருக்கை வசதிகள் நிலை மற்றும் போக்குவரத்து உதவி தேவைப்படும் மாணவரின் விவரம் சேகரித்து மே 20-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அதேபோன்றுஆசிரியா்கள் வெளியூா் சென்றிருந்தால் மே 20-ஆம் தேதிக்குள் பள்ளிகளுக்கு பணிக்கு திரும்ப அறிவுறுத்த வேண்டும். அதன் விவரங்களையும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள மாணவா்களை மே 25-ஆம் தேதிக்குள் அவா்களின் இருப்பிடத்துக்கு தலைமை ஆசிரியா்கள் வரவழைக்க வேண்டும். இதற்கான ‘இ-பாஸ்’ பெறும் பணிகளை தலைமை ஆசிரியா்களே மேற்கொள்ள வேண்டும். மேலும், பள்ளிகளை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளையும் போா்க்கால அடிப்படையில் செய்து முடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.