CBSE 9, 10 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடங்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، أبريل 07، 2020

Comments:0

CBSE 9, 10 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடங்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CBSE New Subjects 2020: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education) 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, புதிதாக ஒன்பது பாடங்களை (Optional Subjects) அறிமுகம் செய்துள்ளது. இது ப்றறிய விவரங்களை இங்கு பார்க்கலாம்.
Central Board of Secondary Education (CBSE) எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சிபிஎஸ்இ 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு 9 புதிய பாடங்களை அறிமுகம் செய்துள்ளது. சிபிஎஸ்இ.,யில் ஒவ்வொரு ஆண்டும் பாடத்திட்டத்தில் புதியவைகள் சேர்க்கப்பட்டும், புதிய பாடத்திட்டம் கொண்டு வருவதும் வழக்கம். அந்த வகையில், அண்மையில் 11 ஆம் வகுப்பில் அப்ளைடு மேத்தமேட்டிக்ஸ் (Applied Mathematics) என்ற பாடம் அறிமுகம் செய்யப்பட்டது 10 ஆம் வகுப்பு முடிந்து 11 ஆம் வகுப்பு செல்பவர்கள், Mathematics, Applied Mathematics இரண்டில் ஒன்றை தேர்வு செய்யலாம்.
இந்த நிலையில், தற்போது சிபிஎஸ்இ 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு ஒன்பது புதிய பாடங்கள் ஆப்ஷனல் படிப்பாக கொண்டு வரப்பட்டுள்ளது.பொதுவாக 5 கட்டாயப்பாடமாக இருக்கும். அவை, ஆங்கிலம், ஹிந்தி, கணிதம், சமூக அறிவியல், அறிவியல்.இதனைத் தொடர்ந்து தற்போது கூடுதலாக நான்கு பாடங்கள் ஆப்ஷனல் சப்ஜெக்ட் என்ற முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5 கட்டாயப் பாடங்களுக்கு அடுத்தாக 6 வது பாடம் திறனறிவு ஆகும். 7 வது பாடம் மூன்றாவது மொழிப்பாடம் ஆகும். 8,9 பாடங்கள் கல்வி, சுகாதாரம், உடற்கல்வி, பணி அனுபவ பாடங்கள் ஆகும். இவைகளில் ஏதாவது 8, 9 பாடங்களாக தேர்வு செய்து கொள்ளலாம். இந்த 8,9 பாடங்களுக்கான தேர்வு பள்ளி அளவிலே நடத்தப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்படும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة