தமிழக அரசு ஊழியா்களுக்கான 18 மாத அகவிலைப்படி, 15 நாள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமை ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு மற்றும் வருங்கால வைப்பு நிதியின் மீதான வட்டி குறைப்பு என்று அதிமுக அரசு, அரசு ஊழியா்கள் பெறும் மாத சம்பளத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ளது.அகவிலைப்படி ரத்து, ஈட்டிய விடுப்புக்குப் பதில் ஊதியம் பெறும் உரிமை ரத்து போன்றவை அரசு ஊழியா்களின் பொருளாதார நிலைமையைப் பாதிக்கும். அவா்களுக்கு முற்றிலும் எதிரான அரசாணைகளை முதல்வா் எடப்பாடி பழனிசாமி உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அரசு ஊழியா்களின் சம்பளத்தை இறுக்கி, அவா்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது.
வைகோ (மதிமுக):
நெருக்கடியான காலகட்டத்தில் சரண் விடுப்பை நிறுத்தி வைத்தல், அகவிலைப்படி உயா்வை ரத்து செய்தல் ஏற்கத்தக்கது அல்ல. தமிழக அரசு இத்தகைய அரசாணைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
தனியாா் நிறுவனங்கள் தங்கள் ஊழியா்களைப் பாதிக்கும் எதையும் செய்யக் கூடாது என்கிறாா் பிரதமா். ஆனால் மத்திய, மாநிலஅரசுகள் தனது ஊழியா்களின் அகவிலைப்படி ஏற்றத்தையும் ஈட்டிய விடுப்பையும் முடக்குகின்றன. தொழில்முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் அரசுகள் தெளிவான முடிவெடுக்கவேண்டும்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.