உதவி இயக்குனர் தேர்வு தள்ளிவைப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 08, 2020

Comments:0

உதவி இயக்குனர் தேர்வு தள்ளிவைப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு தொழிற்சாலை பணிகளில், உதவி இயக்குனர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் பதவிகளுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தேர்வு அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த தேர்வு வரும், 25, 26ம் தேதிகளில் நடப்பதாக இருந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்த தேர்வு, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப் பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குநர் மற்றும் உதவிக் கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வுகள் , ஊரடங்கு காரணமாக தேர்வு குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறிவித்துள்ளது . இது தொடர்பாக , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிஎஸ்சி ) இன்று ( ஏப் . 7 ) வெளியிட்ட அறிவிப்பில் ,
" தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 09 . 12 . 2019 நாளிட்ட அறிவிக்கை எண் 34 / 2019 இல் 25 . 04 . 2020 மற்றும் 26 . 04 . 2020 ஆகிய நாட்களில் நடைபெறுவதாக அறிவித்திருந்த , தமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில் , குறு , சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவனத்தில் , உதவி இயக்குநர் மற்றும் உதவிக் கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வானது , கரோனா வைரஸ் பரவலால் கடைப்பிடிக்க வேண்டிய சமூக விலகல் காரணமாகவும் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது . தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews