Search This Blog
Tuesday, March 17, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அ.தி.மு.க.,வை சேர்ந்த சைதை துரைசாமி, 1984ல் சட்டமன்ற உறுப்பினர், 2011ல், சென்னை மேயர். 2006 முதல், மனிதநேய கல்வி அறக்கட்டளை துவங்கி, ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட போட்டி தேர்வுக்கான பயிற்சியை, மாணவர்களுக்கு, இலவசமாக வழங்கி வருகிறார். மாணவர் பருவத்தில், இவரது மனம் கவர்ந்த ஆசிரியர்கள் குறித்து, நம்மிடம் உரையாடியபோது...நான், கரூர் மாவட்டம், தும்பிவாடி கிராம அரசு பள்ளியில், 8ம் வகுப்பு வரை படித்தேன். தலைமையாசிரியர் பொன்னையா. எனக்குள் இருந்த பன்முக தன்மையை, கண்டறிந்தார். பொது அறிவு, தனித்திறனை ஊக்குவிக்க பல முயற்சிகள் எடுத்தார். பள்ளியில் வரும், 'நவமணி' என்ற தினசரி நாளிதழ், 'மஞ்சரி, கலைமகள்' பருவ இதழ்கள், 'கண்ணன்' என்ற சிறுவர் இதழ் ஆகியவற்றை படிக்க வைத்தார். முக்கிய செய்திகளை, படத்துடன் துண்டித்து, 'ஆல்பம்' தயாரிக்கும் பொறுப்பு வழங்கினார். இங்கு தான், எனக்கு பாட புத்தகங்களை கடந்த வாசிப்பு பழக்கம் உருவானது. மேடையில், துாக்குமேடை திரைப்பட வசனம் பேச வைத்து, பல பரிசுகள் அள்ள காரணமாக இருந்தார். தனித்திறனை மேம்படுத்த பேச்சு, கட்டுரை, பாடல் போட்டிகள் நடத்தி ஊக்குவித்தார். வெள்ளிக்கிழமை தோறும், மாலை, 3:30 மணிக்கு, 'பாலர் சபை' கூட்டி, போட்டிக்கான பயிற்சி வழங்கினார்.
மேடையில் நிற்க வைத்து, காந்தி, நேரு போன்ற தலைவர்கள் பேசுவதை போல் பேச வைத்தார். தேசப்பற்று, தியாகிகள் என, ஏராளமான தலைப்புகள் கொடுத்து, பேச வைப்பார். இன்று, நான் மேடைகளில் பேச காரணமாக இருந்தது, பள்ளி மேடையில் கிடைத்த பயிற்சி தான். 30 ரூபாய் கல்வி உதவிக்காக, தொகுதி எம்.எல்.ஏ.,விடம் கையெழுத்து கேட்டேன். அவர் முடியாது என மறுத்துவிட்டார். அதே காலக்கட்டத்தில், பள்ளியில், 'நான் என்னவானால்...' என்ற தலைப்பு கொடுத்து, கட்டுரை போட்டி வைத்தார். 'நான், சட்டமன்ற உறுப்பினரானால்...' என்ற தலைப்பில் எழுதி முதல் பரிசு பெற்றேன். இதற்கு, அந்த எம்.எல்.ஏ.,வின் செயல்பாடு காரணமாக இருந்தது. கபடி விளையாட்டில், மாநில அளவில் விளையாட ஊக்குவித்தார். நேர மேலாண்மையை, உணர வைத்ததும் இவர் தான். பள்ளி வளாகத்தில், காய்கறி தோட்டம் அமைக்க வைத்து, விவசாயிகளின் வலிகளை உணர்த்தியவர். தனலட்சுமி என்ற ஆசிரியை, எனக்குள் இருந்த வாசிப்பின் ஆர்வத்தை அறிந்து, அதை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தினார். வார இதழ்கள் வாங்கி கொடுப்பார். 'ராணி'யில் வெளிவந்த, 'பூங்குழலி' என்ற தொடர்கதையை, தொடர்ந்து வாசிக்க ஊக்கப்படுத்தியவர்.இதற்காக, 'புதன்கிழமை என்று வரும்' என காத்திருப்பேன். 'கல்லோ காவியமோ, கரித்துண்டு' போன்ற நாவல்களை, 7ம் வகுப்பிலேயே வாசிக்க கொடுத்தார்.
தமிழ்வாணனின், துப்பறியும் கதைகள், நிஜ சம்பவங்களை பிரதிபலிப்பவை என உணர்த்தியவர். அண்ணா, சம்பத், கலைஞர் போன்றோரின் புத்தகங்களை படிக்க வைத்து, அரசியல் ஞானம் வேரூன்ற வைத்தவர்.சரஸ்வதி என்ற ஆசிரியை, எனக்குள் இருந்த கலை உணர்வை வெளி கொண்டு வந்தார். ராகத்துடன் பாட கற்று கொடுத்தவர். எம்.ஜி.ஆர்., திரைப்பட பாடல்கள், மீது தீராத காதல் ஏற்படுத்தியவரும் இவரே.நான் இன்று இந்தளவு உயர்வடைந்ததற்கு, என்னை செதுக்கிய அந்த மூன்று ஆசிரியர்கள் தான் காரணம். படிப்பு, விவசாயம், விளையாட்டு, கலை உணர்வு, பன்முகத்தன்மை கற்று கொடுத்தவர்கள்.பள்ளி பருவத்தில் கிடைத்த அனுபவங்கள் தான், என்னை நல்ல திசையை நோக்கி செலுத்தியது. மாணவன், தெளிவான பாதையில் செல்லும் வகையில், அன்றைய பாடத்திட்டங்கள், கல்வி முறைகள், ஆசிரியர்கள் இருந்தனர். மாணவர்கள், உயர்ந்த நிலைக்கு வர, இது போன்ற சிறந்த ஆசிரியர்களே காரணம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
'என்னை செதுக்கிய மூன்று ஆசிரியர்கள்!'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.