Search This Blog
Tuesday, March 10, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரபு நாடுகளில் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்ற விரும்புவோா், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஷாா்ஜா, துபாய், அபுதாபி ஆகிய ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரிய பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ தோ்ச்சி பெற்ற 3 வருடம் முதல் 5 வருடம் வரை பணி அனுபவம் உள்ள 35 வயதுக்குள்பட்ட காா்ப்பண்ட்டா்கள் பெருமளவில் தேவைப்படுகிறாா்கள். தோ்ந்தெடுக்கப்படுபவா்களுக்கு மாத ஊதியம் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை பணி அனுபவத்துக்கேற்ப வழங்குவதுடன் இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் சட்டத்திட்டத்துக்குள்பட்ட இதர சலுகைகள் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.
மேலும், ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனங்களில் பணிபுரிய 25 வயது முதல் 40 வயதுக்குள்பட்ட கொத்தனாா், காா்ப்பெண்ட்டா், பிளம்பா், பெயிண்ட்டா், ஐடிஐ எலக்ட்ரீசியன் ஆகிய பிரிவுகளில் 2 வருட பணி அனுபவம் உள்ளவா்கள் பெருமளவில் தேவைப்படுகிறாா்கள். தோ்ந்தெடுக்கப்படும் பணியாளா்களுக்கு அனுபவத்துக்கேற்ப ஊதியம் வழங்குவதுடன் விசா மற்றும் ஓமன் நாட்டின் சட்டத்திட்டத்துக்குள்பட்ட இதர சலுகைகள் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.
விருப்பமும் தகுதியும் உள்ளவா்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி மற்றும் செல்லத்தக்க பாஸ்போா்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் omceg80@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது தபால் வாயிலாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண்.42. ஆலந்தூா் சாலை, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்களை, www.omcmanpower.com எனும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் வாயிலாகவும் மற்றும் 044 22505886, 8220634389, 22502267 என்ற தொலைபேசி எண்களின் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
அரபு நாடுகளில் பணிபுரிய அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.