தமிழக மின்வாரியத்தில் 600 உதவி பொறியாளர் பணியிடம் நேரடி நியமனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 17, 2020

Comments:0

தமிழக மின்வாரியத்தில் 600 உதவி பொறியாளர் பணியிடம் நேரடி நியமனம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக மின்வாரியத்தில் 600 உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உதவிபொறியாளர் மின்னியல்-400, இயந்திரவியல்-125, கட்டடவியல்-75 என மொத்தம் 600 பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக தகுதியுள்ள அனைவரிடமிருந்து கணினி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கும், முன்னாள் ராணுவ வீரர்கள், ஆட்குறைப்பு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட அரசுத்துறையில் பணியாற்றி வேலை இழந்த பணியாளர்களுக்கு இதற்கு விண்ணப்பிக்கலாம். ஊதியமாக 39,800-1,26,500 வழங்கப்படும். விண்ணப்பங்கள் இணையம் மூலமாக சமர்ப்பிப்பதற்கான கடைசிநாள் 16.3.2020 ஆகும். தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசிநாள் 19.3.2020. தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும் நாள், தேர்வு நடத்தும் அமைப்பு ஆகிய தகவல்கள் www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அறிவிக்கை எண் . 04 / 2020 நாள் 15 . 02 . 2020 1 . உதவி பொறியாளர் / மின்னியல் , உதவி பொறியாளர் / இயந்திரவியல் மற்றும் உதவி பொறியாளர் / கட்டடவியல் பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்காக தகுதியுள்ள அனைவரிடமிருந்து கணினி அடிப்படையிலான தேர்விற்கு 15 . 02 . 2020 முதல் 16 . 03 . 2020 வரை இணையவழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு | செய்துள்ளவர்களும் , முன்னாள் இராணுவ வீரர்கள் , ஆட்குறைப்பு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட அரசுத்துறையில் பணியாற்றி வேலை இழந்த பணியாளர்களும் , கீழ்வரும் காலிப்பணியிடங்களுக்கு இணையவழி மூலமாக விண்ணப்பிக்கலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews