"ஆங்கிலத்தில் அசத்தல்!" கிராமர் வீடியோக்களாக அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 24, 2020

Comments:0

"ஆங்கிலத்தில் அசத்தல்!" கிராமர் வீடியோக்களாக அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேர்வு என்றாலே மாணவர்களுக்கு பயம்தான். அதிலும், `இங்கிலீஷ் எக்ஸாம்' பற்றி சொல்லவே வேண்டாம். பெற்றோர்களோ, தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வேண்டும் என ஆசைப்படுகின்றனர். அதனால், பெரும் பணம் செலுத்தி, தனியார் பள்ளிகளில் படிக்கவைக்கின்றனர். பெற்றோர்களின் இந்த விருப்பம் அரசுப் பள்ளியிலே கிடைத்தால்..? CLICK HERE TO WATCH HER VIDEO
அதற்கான முயற்சியாக, ஆங்கில இலக்கணத்தை எளிமையாகக் கற்பிக்கிறார், அரசுப் பள்ளி ஆசிரியையான சித்ரா வெங்கடேசன். சென்னையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில், சிங்கப்பெருமாள் கோயிலுக்கு உள்பக்கமாக நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தென்மேல்பாக்கம். அங்கிருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகிறார், சித்ரா வெங்கடேசன். மாணவர்களுக்குப் புதிய முறையில் பாடங்களைப் புரியவைப்பதில் ஆர்வம் காட்டுபவர். இவர் பள்ளியில் செய்த செயல்பாடுகள், சுட்டி விகடனின் எஃப்.ஏ பக்கங்களில் பிரசுரமாகியிருக்கின்றன. தற்போது, வகுப்பறையில் நடத்தும் ஆங்கில இலக்கணப் பகுதியை வீடியோவாக எடுத்து, யூ- டியூபில் பதிவேற்றிவருகிறார். CLICK HERE TO WATCH HER VIDEO
இவரது யூ- டியூப் சேனலுக்கு 9,500 சப்ஸ்கிரைபர்ஸும் இருக்கிறார்கள். எப்படி இது சாத்தியமானது என அவரிடம் கேட்டோம். ``இந்தப் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்பவர்களின் பிள்ளைகளே எங்கள் பள்ளியில் அதிகம் படிக்கின்றனர். அதிகாலையிலேயே வேலைக்குச் களைப்புடன் வீடு திரும்பும் பெற்றோர்களுக்கு, தங்கள் பிள்ளைகளுக்கு வீட்டில் பாடம் சொல்லிக்கொடுக்கும் வாய்ப்பு குறைவு. எனவே, அந்தப் பிள்ளைகளின் மேல் கூடுதலான அக்கறை காட்ட முடிவெடுத்தேன். என்னுடைய சொந்த ஊரும் சிங்கபெருமாள் கோயில்தான். நான் படித்ததும் அரசுப் பள்ளியில்தான். நான் கடந்துவந்த பாதை நினைவில் இருக்கிறது. படிப்பு தவிர, பள்ளியைத் தூய்மையாக வைத்திருப்பதை முதன்மையான பணியாகக் கடைப்பிடிக்கிறோம் சில நிறுவனங்களின் உதவியோடு, கணினி உட்பட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி, தனியார் பள்ளிக்கு நிகராக உருவாக்கியிருக்கிறோம். மாணவர்களுக்குப் பிடித்தவாறு சுவர்களில் ஓவியங்கள் வரைந்திருக்கிறோம். தலைமை ஆசிரியர் அனுகுமாரின் அக்கறையும் முயற்சியும் இதில் அளப்பரியது' என்று தன் பள்ளியின் அறிமுகத்துடன் தொடர்கிறார் சித்ரா வெங்கடேசன். ``இங்கிலீஷ் என்றாலே பெரும்பாலான மாணவர்களுக்கு பயமும் தயக்கமும் வந்துவிடும். அதை அவர்களின் மனங்களிலிருந்து தகர்க்க நினைத்தேன்.
அவர்களுக்குப் புரியும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டையும் இணைத்துக் கற்பித்தேன். தமிழ் உரையாடலில் எப்படிச் சொற்களைப் பயன்படுத்துகிறமோ, அப்படித்தான் ஆங்கிலத்திலும் என எளிமையாக்கினேன். மாணவர்களுக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது. எப்போது வேண்டுமானாலும் சந்தேகம் கேட்கலாம் என்று சொல்லியிருக்கிறேன். நான் வகுப்பறையில் ஒருமுறை நடத்துவதைத் திரும்பவும் பார்க்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் விதத்தில் வீடியோவாக்கி, யூ-டியூபில் பதிவேற்றினேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பெற்றோர்களின் போனிலிருந்து மாணவர்கள் இந்த வீடியோவைப் பலமுறை பார்க்கிறார்கள். Direct and Indirect speech, Compound Sentence, Active and Passive Voice - Present Tense உள்ளிட்ட 64 வீடியோக்களைப் பதிவேற்றியுள்ளேன். இதைப் பார்த்த அரசு இணையதளமான TN SCERT, என் வீடியோக்களை அவர்களது இணையதளp பக்கத்தில் பகிர்ந்துள்ளது. வீடியோக்களுக்குக் கிடைக்கும் வரவேற்பும் விமர்சனமும் என்னை இன்னும் ஆர்வத்துடன் இயங்கவைக்கிறது. CLICK HERE TO WATCH HER VIDEO
சவுதி அரேபியாவிலிருந்து ஒருவர், `தமிழ்நாட்டில் பலருக்கும் ஆங்கிலம் தெரியாது என இங்குள்ளவர்கள் நினைக்கின்றனர். அவர்களுக்கு உங்களின் வீடியோக்களைத்தான் அனுப்பிவைக்கிறேன்' எனப் பாராட்டியிருந்தார். என்னுடைய நோக்கம், மாணவர்களுக்கு எளிமையான வழியில் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும். அதன்மூலம், உலகத்துடன் தொடர்புகொள்ளும் புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே" என்று புன்சிரிப்புடன் சொல்கிறார் சித்ரா வெங்கடேசன். சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோவில், ஒரு வகுப்பறையில் பாடங்களைத் தொடங்குவதற்கு முன்பு செய்யவேண்டிய வாம்-அப் செயல்பாட்டை விளக்கியிருந்தார். அது, சிறப்பான கவனத்தைப் பெற்றுள்ளது. `இதை, நான் சிறுவயதில் பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்தபோது பழகிக்கொண்டேன் இந்த வாம்-அப் பயிற்சி, மாணவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தும்' எனப் பகிர்ந்துகொள்கிறார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews