அமெரிக்க வேலையை விட்டுவிட்டு கல்வி சேவையில் இறங்கிய இளைஞர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 20, 2020

Comments:0

அமெரிக்க வேலையை விட்டுவிட்டு கல்வி சேவையில் இறங்கிய இளைஞர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவர், தனது வேலையை உதறிவிட்டு, தாய்நாட்டில் கல்வியை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதற்காக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளைப் பற்றிய விரிவான தகவல்களை ‘ஸ்கூல்மைகிட்ஸ்’ என்ற இணையதளத்தில் சேகரித்து வருகிறார்.
பிரசவத்துக்கு முன்பாக இருந்தே, தங்களில் குழந்தைகளுக்கு ஏற்றநல்ல தரமான பள்ளியை தற்போதையபெற்றோர்கள் தேட தொடங்கிவிட்டனர். சிறிய பொருள் வாங்க வேண்டும் என்றாலே இணையத்தை தேடி செல்லும் இந்த தலைமுறைக்காகவே, இணைய வழி பள்ளி தேடலுக்காக புதிய இணையதளத்தை அருண் மீனா என்ற இளைஞர் உருவாக்கி உள்ளார். இவர் அமெரிக்காவில் உள்ளஒரு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தார். அதைஉதறி தள்ளிவிட்டு, இந்தியா திரும்பி உள்ளார். பின்னர், பள்ளிகளைத் தேடி அலையும் பெற்றோர்களுக்காக ‘ஸ்கூல்மைகிட்ஸ்’ (எனது குழந்தைக்கான பள்ளி) என்ற இணையதளத்தை உருவாக்கி, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளைப் பற்றிய தகவல்களை உள்ளடக்கி வருகிறார்.
இதுதொடர்பாக அருண் மீனா கூறியதாவது: ஸ்கூல்மைகிட்ஸ் இணையதளத்தில் நாடு முழுவதும் உள்ளமழலைப் பள்ளிகள் முதல் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் வரை அனைத்து விவரங்களையும் சேர்த்து வருகிறோம். இணையதளத்தை மாதம் 5 லட்சம் பேர் பார்வையிடுகிறார்கள். அதனை 10-12 லட்சமாக உயர்த்த இலக்கு வைத்துள்ளோம். தற்போது, ​​அதிக தகவல்கள் ஒழுங்கமைக்கப்படாத வடிவத்தில் உள்ளன. இதுவரை நாடு முழுவதும் 6,000பள்ளிகள் பற்றிய தகவல்கள்உள்ளன. அதனை படிப்படியாக உயர்த்தி வருகிறோம். இணையதளத்தில் உள்ள தகவல்கள் மூலம் பெற்றோர் தங்களின் குழந்தைகளை சரியான பள்ளியில் சேர்க்க முடியும். இதற்காக எந்த நிதியும் வசூலிக்கவில்லை. தளத்தை வலுப்படுத்தவே விரும்புகிறோம். இவ்வாறு அருண் மீனா தெரிவித்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews