JEE தேர்வெழுத போறீங்களா? முழு விபரங்கள்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 25, 2020

Comments:0

JEE தேர்வெழுத போறீங்களா? முழு விபரங்கள்!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியா முழுக்க மத்திய அரசால் நடத்தப்படும் பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான என்ஐடிக்கள் , ஐஐடிக்களில் இளநிலை என்ஜினீயரிங் படிக்க விரும்பும் பிளஸ் டூ மாணவர்கள் , ஜே இ இ மெயின் நுழைவுத்தேர்வை எழுதவேண்டும். இந்த நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே , ஐஐடிக்காக தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வை எழுதமுடியும் . இதனால் ஜே இஇ மெயின் தேர்வு கணிதம் , இயற்பியல் , வேதியியல் பாடங்களைப் படித்த பிளஸ் டூ மணவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது .
தற்போது ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது . கல்வித் தகுதி : 2018 , 2019 - ல் பிளஸ் டூ வகுப்பில் கணிதம் , இயற்பியல் , வேதியியல் ஆகியவற்றை முதன்மைப்பாடமாக எடுத்து , குறைந்த பட்சம் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வை எழுத தகுதியுடையவர்கள் ஆவர் . இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்கலாம் . ஜே இ இ மெயின் தேர்வு பிஇ , பிடெக் படிப்புகளுக்கு மட்டுமின்றி , பி . ஆர்க் , பி . டிசைன் படிப்புகளுக்கும் நடத்தப்படுகிறது . கம்ப்யூட்டரில் நடத்தப்படும் முதல் தாளில் கணிதம் , இயற்பியல் , வேதியியல் ஆகிய பாடங்களிலிருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும் . இத்தேர்வுக்கு விடையளிக்க மூன்று மணி நேரம் அளிக்கப்படும்.
சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் . ஒவ்வொரு தவறான விடைக்கும் 1 மதிப்பெண் கழிக்கப்படும் . பி . ஆர்க் . , பி . பிளானிங் படிப்புகளில் சேருவதற்கான மெயின் தேர்வு இரண்டாம் தாளின் முதல் பகுதியில் கணிதம் , ஆப்டிட்யூட் டெஸ்ட் ஆகிய பிரிவுகளுக்கான கேள்விகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் விடையளிக்க வேண்டியிருக்கும் . அதில் இரண்டாவது பகுதியான டிராயிங் டெஸ்ட் எழுத்துத் தேர்வுக்கு மூன்று மணி நேரம் வழங்கப்படும் . வினாத்தாள் ஆங்கிலம் , இந்தி மற்றும் குஜராத்தியில் இருக்கும். விண்ணப்பிக்கும் முறை : தேர்வுக்கட்டணமானது ஒவ்வொரு தேர்வுக்கும் ஏற்ப மாறுபடுகிறது . குறைந்தபட்சம் 650 ரூபாயாகவும் , அதிகபட்சம் 1300 - ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை , மதுரை , திருச்சி , புதுச்சேரி உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் தேர்வு எழுதலாம் . ஏப்ரல் 5 , 7 , 8 , 9 , 11 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் . தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30 - ஆம் தேதி வெளியிடப்படும் . ஆன்லைன் முறையிலும் கையால் எழுதும் முறையிலும் தேர்வு நடத்தப்படும்.
பாடத்திட்டங்கள் , தேர்வுக்கட்டண விவரங்கள் , மாதிரித் தேர்வு எழுதிப் பார்ப்பதற்கான வசதிகள் , மாதிரி வினாத்தாள்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன . ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 6 - 3 - 2020 விவரங்களுக்கு : http://jeemain.nta.nic.in
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews