ஆள் மாறாட்டம் செய்தால் தேர்வு எழுத ஆயுள் தடை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 29, 2020

Comments:0

ஆள் மாறாட்டம் செய்தால் தேர்வு எழுத ஆயுள் தடை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொதுத் தேர்வுகளில் ஆள் மாறாட்டம் செய்தால், நிரந்தரமாக தேர்வு எழுத முடியாமல் ஆயுள் தடை விதிக்கப்படும்' என, அரசு தேர்வு துறை எச்சரித்துள்ளது.இது குறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மார்ச்சில் துவங்க உள்ள, பிளஸ் ௨, பிளஸ் ௧ மற்றும் 10ம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகளில், முறைகேடுகளில் ஈடுபட்டாலோ, ஈடுபட முயன்றாலோ, பல்வேறு தண்டனைகள் வழங்கப்படும்.ஆள் மாறாட்டம் செய்தால், அரசு தேர்வு துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை நடத்தும் அனைத்து தேர்வுகளையும் எழுத, நிரந்தரமாக ஆயுள் தடை விதிக்கப்படும். மற்றவர்களை பார்த்து காப்பி அடித்தால், தேர்வறையில் இருந்து மாணவர் வெளியேற்றப்படுவர். தொடர்ந்து, இரண்டு தேர்வுகள் எழுதுவதற்கு தடை விதிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுஉள்ளது.
முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தங்களது மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் / தலைமையாசிரியர்களுக்கும் , நடைபெறவுள்ள மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு / இடைநிலை பொதுத்தேர்வுகள் நடைபெறும் நாட்களில் , தேர்வுக்கு வருகைப்புரியாதோர் விவரத்தினை பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றி அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தின் வழியாக பதிவேற்றம் செய்வதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . 1 . தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் , தங்கள் தேர்வு மையத்தில் தேர்வுக்கு வருகைப்புரியாதோர் விவரத்தினை ( பாடவாரியாக ) தேர்வு நடைபெறும் நாளன்றே பிற்பகல் 4 : 00 மணிக்குள் தங்கள் தேர்வு மையத்திற்கான USER ID மற்றும் Password - ஐ பயன்படுத்தி , அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தின் வாயிலாக ( www . dge . tn . gov . in - - - click here to access online portal - - Higher Secondary Second Year March 2020 | Higher Secondary First Year March 2020 | SSLC March 2020 - - User ID - - Password - - கொண்டு - - Absentees Details பதிவேற்றம் செய்திட வேண்டும்.
2 . தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் , தங்கள் தேர்வு மையத்தில் தேர்வுக்கு வருகை புரியாதவர்கள் எவரும் இல்லை எனில் , கண்டிப்பாக இணையதளத்தின் வாயிலாக NIL REPORT - ஐ ( Day | Subject wise ) பதிவு செய்திட வேண்டும் . 3 . தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் , தேர்வு நடைபெறும் நாட்களில் ஒவ்வொரு நாளும் பிற்பகல் 4 : 00 மணிக்குள் இப்பணியினை கண்டிப்பாக செய்து முடிக்கவேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews