بحث هذه المدونة الإلكترونية
الاثنين، فبراير 17، 2020
1
Comments
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள, மத்திய அரசு கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி.,- ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைகளில், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும், தமிழகத்தை சேர்ந்த, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் இன மாணவ, மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாணவர் ஒருவருக்கு, ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை, கல்வி உதவித்தொகைவழங்கப்படும்.இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், சென்னை, சேப்பாக்கம் எழிலக கட்டத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் அல்லது அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகி, விண்ணப்பங்களைபெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில், சமர்பிக்க வேண்டும்.கல்வி நிறுவனங்கள், விண்ணப்பத்தை பரிந்துரை செய்து, பிப். 28ம்தேதிக்குள், சமர்பிக்க வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
மத்திய அரசு கல்வி உதவித்தொகை பெற வாய்ப்பு!
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
But please send me the link for this scholarship to my no.9865364597
ردحذف