பிளஸ் டூ முடிக்கும் மாணவர்கள் ஜேஇஇ நுழைவுத்தேர்வை எழுதி தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம். ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு இன்று (பிப்.7) தொடங்கியுள்ளது. மார்ச் 7 ஆம் தேதி வரையில் விண்ணப்பப்பதிவு நடைபெறும்.
JEE Main April 2020 தேர்வுக்கான ஹால்டிக்கெட் மார்ச் 16 ஆம் தேதி ஆன்லைனில் வெளியாகும். ஏப்ரல் 5,7,8,9,11 ஆகிய தேதிகளில் JEE தேர்வுகள் நடைபெறும். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
1. மாணவர்கள் முதலில் https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
படி 2: முகப்பு பக்கத்தில் JEE Main April 2020 என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
படி 3: அதனை க்ளிக் செய்தால், ஜேஇஇ தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் திரையில் தோன்றும்
படி 4: மாணவர் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, கல்வித்தகுதி, புகைப்படம் உள்ளிட்ட கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் அளிக்கவும்.
படி 5: ஆன்லைன் வழியாக விண்ணப்பக்கட்டணம் செலுத்தவும்
படி 6: விண்ணப்பப்பதிவு முடிந்ததும், பதிவு எண், கடவுச்சொல் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொள்ளவும்
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.