மகா சிவராத்திரி 2020 தினம் எப்போது?- ஒரு நாள் விரதத்தால் மோட்சம் கிடைக்கும் தெரியுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، فبراير 17، 2020

Comments:0

மகா சிவராத்திரி 2020 தினம் எப்போது?- ஒரு நாள் விரதத்தால் மோட்சம் கிடைக்கும் தெரியுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அம்பிகையின் அருள் பெற நவராத்திரி, இருக்கும் நிலையில் சிவனின் அருளைப் பெற அதுவும் முக்தியைத் தரக்கூடிய வல்லமை வாய்ந்த மிகச் சிறப்பு வாய்ந்த நாளாக கொண்டாடப்படுவது தான் மகா சிவராத்திரி. இந்தாண்டு எப்போது கொண்டாடப்படுகிறது. அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
நாம் சிவ ராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், நாம் செய்த பாவங்களையும், நமக்கே தெரியாமல் செய்த பாவங்களையும் நீக்கி அருளுவார் என்பது ஐதீகம்.
இப்படிப்பட்ட மிக அருமையான மகா சிவராத்திரி தினம் இந்தாண்டு 21 பிப்ரவரி 2020ல் வருகிறது.
சிவ ராத்திரியின் புராண கதை:
பிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் படைக்கப்பட்ட எல்லா ஜீவ ராசிகளும் அழிந்து விட்டன. அந்த சூழலில் இரவு பொழுதில் அன்னை உமாதேவி, ஈசனை நினைத்து பூஜித்து வந்தார்.
இரவில் நான்கு ஜாமங்களில் ஆகம விதிப்படி சிவனுக்கு அர்ச்சனை செய்தார். வழிபாட்டின் முடிவில் அம்பிக்கை சிவனை வணங்கி வேண்டிக்கொண்டார்.
தான் பூஜித்த இந்த இரவு, ‘சிவ ராத்திரி’ என்று கொண்டாட வேண்டும் என வேண்டிக் கொண்டார். அப்படிப்பட்ட உன்னத நாள் தான் தேவர்களும், மனிதர்களும் இன்றும் சிவ ராத்திரி என்ற பெயரிலேயே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
சிவ ராத்திரியின் சூட்சமம் :
சிவ ராத்திரி தினத்தன்று சூரியன் மறந்த முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் காலம் வரை சிவ பெருமானை பூஜை செய்து வழிபடுபவர்களுக்கு அனைத்து வித பாக்கியங்களும் தந்து, இறுதியில் மோட்சம் தர வேண்டும் என மகேஸணை உமா மகேஸ்வரி வேண்டிக் கொண்டாள். அதன் படி சிவ ராத்திரி தினத்தில் யாரெல்லாம் சிவ பெருமானை நினைத்து வழிபடுவோருக்கு அனைத்து இன்னல்களும் நீங்கி மோட்சமும் கிட்ட வேண்டும் என சிவ பெருமானிடம் வரம் பெற்றார் என்பது ஐதீகம்.
தன்னை அறியாமல் மோட்சம் பெற்ற வேடன் :
ஒரு வேடன் காட்டில் வேட்டையாட சென்றிருந்தான். அன்றைய தினம் பல முயற்சிகள் செய்தும், பல இடங்களில் அலைந்து திரிந்தும் எந்த ஒரு விலங்கையும் வேட்டையாட முடியவில்லை. சூரியன் மறையக்கூடிய நேரம் வந்தது.
அப்போது ஒரு புலி அவனருகே வந்துவிட்டது. பயந்து போன அவர் அவனருகே இருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியோ அவனை திண்றுவிட வேண்டும் என்ற ஆவலில் வேடன் இருந்த வில்வ மரத்தை சுற்றி சுற்றி வந்தது.
சூரியன் மறைந்து இருண்டது. ஆனால் புலி மரத்தை விட்டு நகலவில்லை. தூக்கம் காரணமாக கண் அசர்ந்து கீழே விழுந்துவிட்டால், புலிக்கு இறையாகி விடுவோமே என்ற பயத்தில், மரத்தில் இருந்த ஒவ்வொரு இலையாக பிடுங்கி கீழே போட்டுக்கொண்டே இருந்தான்.
அது அவனுக்கே தெரியாமல் மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது அந்த வில்வ இலைகள் விழுந்து அது வில்வ அர்ச்சனையாக மாறியிருந்தது.
சிவ ராத்திரியாக அமைந்திருந்த அன்றைய தினம் இரவு முழுவதும் அவனுக்கு தெரியாமலேயே, கொஞ்சம் கூட தூங்காமல் சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்ததால், அந்த வேடனுக்கு ஈசன் முக்தி அளித்து மோட்சத்தை அருளினார் என்கிறது புராணக்கதை.
இந்த காரணத்தால் மகா சிவராத்திரி தினத்தில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களை போக்கி மோட்சம் எனும் நல்லருளை வழங்குவார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة