TANCET - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 01, 2020

Comments:0

TANCET - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதுநிலை பொறியியல் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு (டான்செட்- 2020) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எம்.இ., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளிலும், பொறியியல் மற்றும் கலை-அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளிலும் டான்செட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
2020-ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு பிப்ரவரி 29, மார்ச் 1 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. முதல் நாளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கும், இரண்டாம் நாளில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கும் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு செய்ய ஜனவரி 31 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது. இப்போது விண்ணப்பப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் பிப்ரவரி 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews