முதற்கட்டமாக தேர்வாணையம் கீழ்கண்ட ஆறு முடிவுகளை உடனடியாக செயல்படுத்தவுள்ளது
1 . தேர்வு நடைமுறைகள் முழுவதும் நிறைவடைந்தவுடன் , இறுதியாகத் தேர்வுபெற்ற நபர்கள் தொடர்பான அனைத்துத் விவரங்களும் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும் இதன் தொடக்கமாக 2019ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி | தேர்வின் நடைமுறைகள் முற்றிலுமாக நிறைவடைந்த நிலையில் தேர்ச்சியடைந்த 181 தேர்வர்களின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
2 . தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் நிறைவடைந்த பின் தேர்வர்களின் விடைத்தாள் நகல்களை ( OMR மற்றும் எழுத்துத் தேர்வு விடைத்தாள்கள் ) இணையதளம் மூலமாக உரிய கட்டணம் செலுத்தி உடனடியாக பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும் . இம்முறை ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும். CLICK HERE TO DOWNLOAD PDF
இம்முறையும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் . இனிவருங்காலங்களில் வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் உறுதியாகத் தொடர்ந்து எடுக்கப்படும்.
4 . தேர்வு மையம் ஒதுக்கீடு : தேர்வாணையம் தேர்வர்களின் நலன் கருதியே அவர்தம் விருப்பப்படி தேர்வு மையத்தினை இணைய வழி விண்ணப்பித்தலின் போது தேர்வு செய்யும் நடைமுறையினை பின்பற்றி வருகிறது இனி தேர்வர்கள் இணைய வழியே விண்ணப்பிக்கும் போது மூன்று மாவட்டங்களைத் தங்களுடைய தேர்வு மைய விருப்பமாக தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவர் . தேர்வு எழுதும் மையங்களை ( வருவாய் வட்டம் - Taluk மற்றும் தேர்வுக் கூடம் ) தேர்வர்களுக்கு அதிக சிரமம் ஏற்படாத வகையில் தேர்வாணையமே ஒதுக்கீடு செய்யும். CLICK HERE TO DOWNLOAD PDF
6 , தொழில்நுட்பத் தீர்வு : மேலும் , இனிவரும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பாகவே முறைகேடுகள் ஏதேனுமிருப்பின் அதனை முன்கூட்டியே அறிந்து , முழுவதும் தடுக்கும் வண்ணமாக உயர் தொழில் நுட்பத் தீர்வு வரவிருக்கும் தேர்விலிருந்து நடைமுறை படுத்தப்படும் .இதுமட்டுமல்லாமல் தேர்வு நடைமுறை சார்ந்த பிற செயல்பாடுகளிலும் விரைவில் தக்க மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் .
நாள் 07 . 02 . 2020 )
செயலாளர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.