பிப்ரவரி 9, 10-ம் தேதிகளில் முதுநிலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 06, 2020

Comments:0

பிப்ரவரி 9, 10-ம் தேதிகளில் முதுநிலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,150 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. *.இந்தத் தேர்வை 1.46 லட்சம் பேர் எழுதினர். இதில் தரவரிசை யின்படி முன்னிலையில் இருந்த 3,833 பேருக்குநவம்பரில் சான்றி தழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
*.இதைத் தொடர்ந்து தேர்ச்சி பட்டியலும் வெளியானது. இந்நிலையில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு மாவட்டவாரியாக பிப்ரவரி 9, 10 தேதிகளில் நடைபெறும் என்று கல்வித் துறை தெரிவித்துள்ளது. *.இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முது நிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்தேர்வு வாரியத் திடம் இருந்து தேர்ச்சி பட்டியல் பெறப்பட்டுள்ளது.
*.இதையடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கு வதற்கான கலந்தாய்வு பிப்ர வரி9, 10-ம் தேதிகளில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும். *.எனவே, தேர்ச்சி பெற்ற பட்ட தாரிகள் அனைவரும் உரிய அத்தாட்சி சான்றுடன் கலந்தாய் வில் பங்கேற்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி இயக்ககம் பத்திரிக்கை செய்தி அரசு , நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து பணிநாடுநர் பட்டியல் பெறப்பட்டது . அவர்களுக்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 9 - 2 - 2020 மற்றும் 10 - 2 - 2020 ஆகிய இரண்டு நாட்களில் அந்தந்த மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் கீழ்கண்ட அட்டவணைப்படி நடைபெறவுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews