மாணவிகளை விவசாயிகளாக்கும் முயற்சியில் பட்டதாரி பெண்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 16, 2020

Comments:0

மாணவிகளை விவசாயிகளாக்கும் முயற்சியில் பட்டதாரி பெண்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசுப் பள்ளி மாணவிகளை விவசாயிகளாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார், ஈரோடு கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த திவ்யா வாசுதேவன். ஃபேஷன் டிசைனிங் படித்துவிட்டு விவசாயத்திற்கு மாறியதோடு இன்று பல விவசாயிகளின் வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார் இவர். யார் இந்த திவ்யா வாசுதேவன்? ஏன் விவசாயம் மீது இவ்வளவு அக்கறை அவரிடமே கேட்டோம்: ""ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் என்ற கிராமம் தான் என்னுடைய சொந்த ஊர். அப்பா விவசாயி. எம்.பி.ஏ ஃபேஷன் டிசைனிங் படித்தேன். தொடர்ந்து பல தனியார் நிறுவனங்களில் பணியாற்றினேன். இறுதியாக சென்னையில் மாதம் 93 ஆயிரம் ஊதியத்தில் வேலை செய்தேன்.
எனக்குத் திருமணம் ஆயிற்று. கணவரும் விவசாயி தான். மகன் பிறந்தான். அவனுக்கு ஆறு மாதம் தாய்ப்பால் கொடுத்து முடித்ததும், அடுத்த என்ன கொடுப்பது என்று கேள்வி தான் என் வாழ்க்கை மாறக் காரணம் ஆயிற்று. சிறுவயதில் நான் சாப்பிட்டது எதுவும் என்னுடைய குழந்தைக்குக் கிடைக்கவில்லை. டாக்டர்களிடம் கேட்ட போது கேழ்வரகு, கேரட் இரண்டையும் உணவாக கொடுக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்தார். அவர் சொன்ன இரண்டு உணவையும், நான் ஆராய்ச்சி செய்த போது கேழ்வரகு தானாக வளரும் பயிர். பூச்சிகளை எதிர்க்கும் திறன் கொண்டது. அதற்குப் பூச்சி மருந்து அடிக்க வேண்டிய தேவை கிடையாது. ஆனால் கேரட் அப்படி இல்லை. மருந்து அடிக்காமல் வளர்ப்பது கடினம். நம்முடைய சந்ததிகள் சாப்பிடும் காய்கறிகள் எவ்வளவு கெமிக்கல் உள்ளது என்ற விழிப்புணர்வு குழந்தைப் பிறந்த பிறகு தான் ஏற்பட்டது. இதில் ஏதாவது மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், விவசாயம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால், விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. என்னுடைய அப்பாவிடம் பேசினேன். நல்லதொரு திட்டம் உருவாக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளைச் சந்தித்து இயற்கை முறையில் அனைத்துப் பயிர்களையும் எப்படி விளைவிப்பது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். 2012 -ஆம் ஆண்டு "அக்ரோ லைப்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன். இது முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு வழிகாட்டும் நிறுவனம். வெறும் நூறு ரூபாய் மட்டும் கொடுத்து எங்களிடம் அவரது பெயரை பதிவு செய்ய வேண்டும். அவர் என்ன பயிர் செய்ய விரும்புகிறார்கள் என்பதைத் தெரிவித்தால், எப்போது பயிர் செய்ய வேண்டும். எந்தக் கட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது முதல் அறுவடை வரை வழிகாட்டுவோம்.
அதாவது ஒரு குழந்தைப் பிறந்து வளரும் போது, என்னென்ன தடுப்பூசி போட வேண்டும். எந்த ஊட்டசத்து உள்ள உணவுகளையும் கொடுக்க வேண்டும் எனப் பயிர்களைக் குழந்தைகளாகப் பாவித்து அதனுடைய வளமுடன் நலமாக அறுவடை செய்யும் வகையில் வழிகாட்டுகிறோம். கடந்த 7 ஆண்டுகளில் 4300 விவசாயிகள் எங்களால் பயனடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இயற்கை விவசாயத்திற்கு மாற்றியிருக்கிறோம். இந்தத் திட்டம் வெற்றி அடைவதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தது என்னுடைய அப்பாவும் கணவரும் தான். எந்த ஒரு பெண்ணுக்கும் குடும்பம் என்ற அடித்தளம் மிகவும் முக்கியம். அது சரியாக அமைத்துவிட்டால் அவர்களின் சாதனை என்பது மிகவும் எளிதாகிவிடும். அது எனக்கு சரியாக அமைந்தது. இந்த மாற்றத்திற்குப் பிறகு விவசாயிகளைச் சந்தித்து உரையாடிய போது, உங்களுக்குப் பிறகு இந்த நிலத்தைப் பார்த்துக் கொள்வது யார் என்ற கேள்வி எழுப்பிய போது, "என்னுடைய மகன் பேராசிரியர், வெளிநாட்டில் நல்ல ஊதியத்தில் பணியாற்றுகிறார், ஆசிரியராக இருக்கிறார் என்று பதில் வந்ததே தவிர, என்னுடைய மகனும் விவசாயம் பார்க்க வருவான் என்று யாரும் சொல்ல வில்லை. மாறாக இந்த நிலத்தின் எல்லை எது என்று என்னைத் தவிர யாருக்கும் தெரியாது. நான் இந்த நிலத்தை விற்றுவிட்டு அவர்களிடம் பணத்தைக் கொடுத்துவிடப் போகிறேன்' என்று சொன்னார்கள்.
இது எனக்கு மிகவும் மன வேதனை அளித்தது. இதனை மாற்ற வேண்டுமானால் நம்முடைய கல்வித்திட்டத்தில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விவசாயம் சொல்லித்தர வேண்டும் என்று என்னுடைய நோக்கத்தை யாருடைய உதவியும் இல்லாமல் பல கட்டத் தேடுதல்களுக்குப் பிறகு கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்துச் சொன்னேன். அவர் என்னைப் பாராட்டியதோடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விவசாயம் சொல்லிக் கொடுக்க உடனே ஏற்பாடு செய்து கொடுத்தார். தற்போது கோவை மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசுப்பள்ளியில் பயிலும் இரண்டாயிரம் மாணவிகளுக்கு விவசாயம் சொல்லிக் கொடுத்து வருகிறேன். அதாவது ஒரு மாதத்திற்கு நான்கு வகுப்புகள். இதில் முதல் இரண்டு வகுப்புகள் பள்ளியிலுள்ள பசுமைப்படை மூலம் பள்ளியிலேயே குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கி அதில் கீரை விளைவிப்பது எப்படி? அதனைப் பராமரித்து அறுவடை செய்வது வரை கற்றுக்கொடுக்கிறோம். மாணவிகளும் மிகுந்த ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள். அடுத்த இரண்டு வகுப்புகளில் ஒரு வகுப்பு "ஸ்மார்ட் கிளாஸ்' மூலம் விவசாயம் பற்றிய ற்ட்ங்ர்ழ்ஹ் சொல்லிக்கொடுக்கிறோம். மற்றொன்று இன்ப்ற்ன்ழ்ங் ஜ்ண்ற்ட் அஞ்ழ்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங் என்ற பெயரில் நம்முடைய கலாசாரம், குடும்ப உறவுகள் என அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் விஷயங்களைச் சொல்லித் தருகிறோம். கல்லூரி மாணவிகளுக்கும் ஊக்கத்தை அளிக்கும் வகையில் தன்னம்பிக்கை உரையை நிகழ்த்தி வருகிறேன்'' என்கிறார் திவ்யா வாசுதேவன்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews