பள்ளியின் கண்டிப்பு மாணவனின் உயிர்பறித்த சோகம்..! திருச்சியில் பகீர்.!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 12, 2020

Comments:0

பள்ளியின் கண்டிப்பு மாணவனின் உயிர்பறித்த சோகம்..! திருச்சியில் பகீர்.!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறியில் செல்லாமல் தனியார் சி.பி.எஸ்.சி பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் முசிறி காந்திநகர் பகுதியை சார்ந்த துரைராஜ் - வாசுகியின் தம்பதிகளான மூத்த மகன் பிரவீன் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். ப்ரவீனுடைய தந்தை துரைராஜ் மலேசிய நாட்டில் பணியாற்றி வரும் நிலையில்., தாயார் வாசுகியின் கவனிப்பில் பிரவீன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில்., கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக ப்ரவீனும் - சக மாணவியும் காதலித்து வந்ததாக தெரியவருகிறது. இவர்களின் காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரியவந்ததை அடுத்து., பெற்றோர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் மாணவி ப்ரவீனுடன் பேசுவதை நிறுத்தியுள்ள நிலையில்., தற்போது நடைபெற்ற தேர்தலில் பிரவீன் குறைவாக மதிப்பெண்களை எடுத்துள்ளார்.
இதனால் ஆசிரியர் பிரவீனை அனைத்து மாணவ - மாணவிகளின் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகவும்., இதனை கண்ட மாணவியொருவரும் பிரவீனை கேலி செய்ததாக தெரியவருகிறது. இது கடுமையான ஆத்திரத்தை பிரவீனிற்கு ஏற்படுத்தவே., மாணவியை பிரவீன் கன்னத்தில் அறைந்துள்ளார்.. இந்த விஷயத்தின் காரணமாக பிரவீன் கடந்த 10 நாட்களாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்ட நிலையில்., இடைநீக்க நாட்கள் கழித்த பின்னர் பள்ளிக்கு சென்ற மாணவனை பள்ளி நிர்வாகத்தின் சார்பாக நாள் முழுவதும் காத்திருக்க வைத்து திரும்பி அனுப்பியுள்ளனர். இரண்டு நாட்களாக இப்படியே கழிந்துள்ளது. பின்னர் தாயாரையும் பள்ளிக்கு அழைத்து சென்ற நிலையில்., பள்ளி நிர்வாகம் மாணவனுடன் - தாயாரையும் காக்க வைத்துள்ளனர். இதனை கண்ட பலரும் சிரித்தபடியே சென்றதால் பிரவீன் மன வேதனைக்கு உள்ளாகிய நிலையில்., பள்ளியில் இருந்து பிரவீனை நீக்கம் செய்துள்ளனர்.
இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த பிரவீன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும்., தனது மகனின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகமே காரணம் என்று தாயார் குற்றம் சாட்டியுள்ளார். மேலும்., மாணவனின் தவறுக்காக எத்தனை நாட்கள் தண்டனையை தருவீர்கள் என்றும்., மனவருத்தமாக இருந்த மகன் சாப்பிடாமல்., தூங்காமல் தவித்த நேரத்திலும் ஆறுதல் அளித்து பார்த்துக்கொண்டு நிலையில்., இறுதியில் நடந்த இரண்டு நாள் துயரத்தால் மகன் விபரீத முடிவெடுத்துள்ளதாக உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக முசிறி காவல் நிலையத்தில் புகாரளித்தும் பயனில்லை என்பதால்., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும்., முதலமைச்சரின் தனி பிரிவுக்கு புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews