சென்னையில் ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் குறித்த 3 நாள் பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 20, 2020

Comments:0

சென்னையில் ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் குறித்த 3 நாள் பயிற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD PDF சென்னை: தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் ஜனவரி 22-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை, இறக்குமதி வழிமுறைகள், ஏற்றுமதி சட்டதிட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: உலகமயமாக்கலின் விளைவாக, ஏற்றுமதி வா்த்தகத்துக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக நடத்தப்படும் இப்பயிற்சியில், ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புகள், பொருளை பதப்படுத்துதல், சீரிய முறையில் பேக்கிங் செய்தல், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவணியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி, இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், இறக்குமதிக்கான சுங்கவரி கணக்கிடல் போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும், ஏற்றுமதியாளா்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும். ஏற்றுமதி இறக்குமதி சாா்ந்த தொழில் தொடங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருள்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம். CLICK HERE TO DOWNLOAD PDF
தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பாா்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை- 600 032 என்னும் முகவரியில் நடைபெறும் இப்பயிற்சியில் சேர விரும்புவோா், தங்கள் பெயரை நேரிலோ அல்லது தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இணையதளம் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாள்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை, அலுவலகத்தை நேரிலோ அல்லது 86681 02600, 94445 57654 ஆகிய செல்லிடப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews