'நுாலகர்கள் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது' - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 20, 2020

Comments:0

'நுாலகர்கள் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது' - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நுாலகர்கள் கோரிக்கை, அரசின் பரிசீலனையில் உள்ளது,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - சரவணன்: திருப்பரங்குன்றம் தொகுதி, பிரசன்னா காலனியில், நுாலகம் அமைக்க அரசு முன்வருமா?அமைச்சர் செங்கோட்டையன்: பிரசன்னா காலனியில், நுாலகம் அமைப்பதற்கு தேவையான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், அரசு பரிசீலிக்கும்.சரவணன்: ஐந்து நிபந்தனைகள் உள்ளன. முதலில், 200 பேர் உறுப்பினர்களாக சேர வேண்டும். வாடகையில்லா கட்டடம் வேண்டும். இரண்டு புரவலர்கள் கேட்கின்றனர்.
இதையெல்லாம் பூர்த்தி செய்து விடுகிறோம். ஐந்து சென்ட் இடம் கேட்கின்றனர்; அதில் பிரச்னை உள்ளது. மாநகராட்சி தேர்தல் நடந்திருந்தால், பிரதிநிதிகள் இந்நேரம் பதவியேற்றிருப்பர். அதனால், நிலம் பெற வாய்ப்பு அமைந்திருக்கும். எனவே, அரசே இடம் கையகப்படுத்தி, நுாலகம் அமைக்க வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: ஆங்காங்கே நுாலகங்கள் திறக்கப்படுகின்றன. உடனே கட்டடம் கட்டுவது, எளிதான காரியமல்ல. எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, நுாலக கட்டடம் கட்ட, 50 சதவீத தொகையை ஒதுக்கினால், அரசு, 50 சதவீதத்தை ஏற்று, நுாலகம் கட்டித் தரும். நுாலகர்கள் கோரிக்கை, அரசின் பரிசீலனையில் உள்ளது.இவ்வாறு, விவாதம் நடந்தது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews