கணினி ஆசிரியர் காலிப் பணியிடங்கள்: தற்காலிக தெரிவு பட்டியல் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 12, 2020

Comments:0

கணினி ஆசிரியர் காலிப் பணியிடங்கள்: தற்காலிக தெரிவு பட்டியல் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தற்காலிக தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கணினி பயிற்றுநர் நிலை 1-க்கான (முதுநிலை ஆசிரியர்நிலை)கணினி வழியிலான தேர்வு கடந்த ஜூன் 23, ஜூன் 27 ஆகிய நாள்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான மதிப்பெண் முடிவுகள் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து சான்றிதழ் சரி பார்ப்புக்கு அழைக்கப்படும் பணிநாடுநர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி சென்னையில் கடந்த 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் அடிப்படையில் தற்போது தற்காலிக தெரிவுப் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews