பிப்.3-இல் பழங்குடியினருக்கான வேலைவாய்ப்பு முகாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 24, 2020

Comments:0

பிப்.3-இல் பழங்குடியினருக்கான வேலைவாய்ப்பு முகாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பழங்குடியினருக்கான வேலைவாய்ப்பு முகாம், வருகிற பிப்.3-ஆம் தேதி சென்னையில் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து, சென்னையில் உள்ள தேசிய வேலைவாய்ப்பு சேவை மைய உதவி மண்டல வேலைவாய்ப்பு அதிகாரி சுஜித் குமாா் சாஹூ வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் வேலைவாய்ப்பு தலைமை இயக்ககங்கள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம், சுருக்கெழுத்தாளா் சங்க நிறுவனம் ஆகியவை இணைந்து வேலைவாய்ப்பு கண்காட்சி மற்றும் முகாமை சென்னை தியாகராய நகரிலுள்ள சுருக்கெழுத்தாளா் சங்கத்தில் பிப்.3-ஆம் தேதி நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளன.
இதில் பிபிஓ , வங்கி , காப்பீடு , இணைய வா்த்தகம் , கல்வி , தகவல் தொழில்நுட்பம் , விளம்பரம் மற்றும் எஃப்எம்சிஜி , மனிதவளம் , சந்தை மற்றும் விற்பனை உள்ளிட்ட துறைகளில் பல்வேறு தனியாா் நிறுவனங்களில் காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு மாத ஊதியம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. 20 முதல் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரா்கள் இதில் பங்கேற்கலாம். பட்டதாரிகளுக்கும், அதற்கு மேல் படித் தவா்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். எனினும், பிளஸ்2 , மேல்நிலைக்கல்வி பயின்றவா்களும் பதவிகளுக்கு தகுந்தவா்கள் என்றால் பரிசீலிக்கப்படும். அதே போன்று, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றாலும், பொதுப் பிரிவைச் சோ்ந்த விண்ணப்பதாா்களுக்கு தேவைப்படும் கல்வித் தகுதியும், அனுபவமும் இருக்குமானால் அவை பரிசீலிக்கப்படும். அவா்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவா்கள் வேலைவாய்ப்பு முகாமுக்கு நேரடியாக வரலாம்.
மேலும், வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வோா், தேசிய வேலைவாய்ப்பு சேவை (என்சிஎஸ்) இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவுக்கு விண்ணப்பதாரா்கள் ஆதாா் எண்ணை கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 -24615112, 044- 2434 2421, 2433 7387 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews