بحث هذه المدونة الإلكترونية
الثلاثاء، يناير 07، 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் 8-ஆவது தேசியக் கல்வி மாநாடு சென்னையில் ஜனவரி - 8, 9 ஆகிய இரண்டு நாள்களும் நடைபெறவுள்ளன.
கடந்த 2013-ஆம் ஆண்டில் முதன்முறையாக மிகப் பெரிய அளவில் தேசியக் கல்வி மாநாட்டை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ஏற்பாடு செய்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு (2020) எட்டாவது தேசிய கல்வி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் கல்விநிலை குறித்தும், இளம் தலைமுறையினர் நாட்டிற்குத் தலைமை தாங்குவது குறித்தும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சிறந்த அறிஞர்களையும், நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துபவர்களையும் ஒரே மேடையில் சந்திக்க வைத்து கலந்துரையாட வைப்பதற்கே தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் இந்த கல்வி மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கிறது.
சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறவுள்ள தேசிய கல்வி மாநாட்டை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்ற உள்ளார்.
கடந்த ஆண்டும் தேசிய கல்வி மாநாட்டை இவர்தான் தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், இளைஞர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, காங்கிரஸ் எம்.பி.க்கள் மணீஷ் திவாரி, எஸ்.ஜோதிமணி, அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் குஷ்பு, திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், எழுத்தாளர் காஞ்சா இலையா உள்ளிட்டோரும் எட்டாவது தேசிய கல்வி மாநாட்டில் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர்.
தற்போதைய கல்வி முறை, புதிய கல்வி கொள்கை ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் ஆரோக்கியமான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.
கல்வி முறை குறித்து புதிய சிந்தனைகளுக்கான இடமாகவும் இந்த மாநாடு திகழும்.
"புதிய மகளிர்: பொறுப்புகளுடன் அதிகாரம்' என்ற தலைப்பில் ஜனவரி 9-ஆம் தேதி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உரை நிகழ்த்தவுள்ளார்.
அரசியல்வாதிகள், அரசு உயரதிகாரிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மட்டுமல்லாமல், நடிகர் சரத்குமார், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், கிராமி விருது வென்ற இசைக்கலைஞர் ரிக்கி கேஜ் ஆகிய திரைத் துறையைச் சேர்ந்த பிரபலங்களும் பங்கேற்கவுள்ளனர்.
பொருளாதார நிபுணர் விவேக் தேவ்ராய், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற ரோஹன் மூர்த்தி, ஆராய்ச்சியாளர் மது கிஷ்வார், தேசிய கல்விக் கொள்கையை வகுத்தளித்தவரும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான கே.கஸ்தூரிரங்கன் உள்ளிட்டோரும் பங்கேற்கும் இந்த மாநாட்டில் கல்வி முறை குறித்து புதிய சிந்தனைகள் பகிரப்படும் என்பதில் சந்தேகமில்லை.
இதற்கு முன்பு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் நடைபெற்ற தேசியக் கல்வி மாநாடுகளில் முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, அப்துல் கலாம் ஆகியோரும், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகாஷ் ஜாவடேகர், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஆர்எஸ்எஸ் முக்கியப் பிரமுகர் ராம் மாதவ், மூத்த அரசியல்வாதிகளான குலாம் நபி ஆஸாத், ஃபரூக் அப்துல்லா, ஷீலா தீக்ஷித், சல்மான் குர்ஷித், அருண் சௌரி, சந்திரபாபு நாயுடு ஆகியோரும், ஆன்மிகத் தலைவர்கள் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோரும் பங்கேற்றிருக்கின்றனர்.
திரையுலகைச் சேர்ந்த அரவிந்த் சுவாமி, சந்தோஷ் சிவன், அனுபம் கெர், கௌதமி, லீலா சாம்சன் உள்ளிட்டோரும் இதற்கு முன்பு நடைபெற்ற தேசியக் கல்வி மாநாடுகளில் பங்கேற்றுள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
சென்னையில் தேசிய கல்வி மாநாடு: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ஏற்பாடு
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.