பொறியியலுக்குப் பின் MBA - Article - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 24, 2019

Comments:0

பொறியியலுக்குப் பின் MBA - Article

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
இன்றைய நிலையில் உலக சந்தையில் போட்டிகள் நிறைந்த சூழல்கள் உள்ளன. நுகர்வோரின் விருப்பங்களை அறிந்து அவற்றைச் சரியாக நிறைவுசெய்வதன் மூலமாகவே, ஒருவர் போட்டி நிறைந்த சந்தையில் நிலைத்து நிற்க முடியும். எனவே, இப்போது உலகளாவிய கண்ணோட்டத்துடன் கூடிய வணிக மேலாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. தலைசிறந்த வணிகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சர்வதேசச் சந்தையில் போட்டியிடும் வகையில் -மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் - பாடத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்தியாவில் எம்பிஏ பட்டதாரிகளுக்கான தேவை அதிகரித்தே காணப்படுகிறது. அதனால், கலை மற்றும் அறிவியல் பிரிவில் இளநிலை பயின்றவர்கள் மட்டுமில்லாமல், பொறியியல் படித்த மாணவர்களும் முதுநிலை கல்வியில் எம்பிஏ படிப்பைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெறலாம். தற்போதைய சூழலில் பொறியியல் படித்த மாணவர்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தங்களது துறைகளில் விருப்பம் உள்ள பொறியியல் பட்டதாரிகள் எம்.இ. அல்லது எம்.டெக் படித்து பேராசிரியர்களாகவோ, துறை சார்ந்த நிறுவனங்களில் பொறியாளர்களாகவோ பணியாற்றுகின்றனர்.
சிலருக்கு டெக்னிக்கல் பிரிவை விட வணிகம், நிர்வாகப் பிரிவுகளில் அதிக ஆர்வம் உள்ளது. அத்தகைய மாணவர்கள், எம்பிஏ படித்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
எம்பிஏ என்பது உலக அளவில் வணிக நடவடிக்கைகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருப்பதால், அதைப் படித்தவர்களுக்கு எங்கு சென்றாலும், ஏதேனும் ஒரு பணிவாய்ப்பு காத்திருக்கும். எம்பிஏ என்பது வெறும் வணிகம் மற்றும் வணிக மேலாண்மை தொடர்பானது என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அரசு மற்றும் பொதுத்துறைகளிலும் அப்படிப்புக்கு தொடர்புள்ளது. ஐஐஎம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் எம்பிஏ படிக்கும் மாணவர்கள், வளாகத் தேர்வின் மூலமாகவே பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ரயில்வே பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
சிறப்பு பிரிவுகள்
எம்பிஏ (நிதி)

நிதி நிர்வாகம் அனைத்து துறைகளுக்குமே அடிப்படையான ஒன்று என்பதால், நிதி சார்ந்த எம்பிஏ பட்டப்படிப்புகள், டிப்ளமோ படிப்புகள் எப்போதும் முன்னணி பெறும் பாடப் பிரிவுகளாக உள்ளன. நிதி என்றதும் பலருக்கும் வங்கித் துறைதான் நினைவுக்கு வருகிறது. வங்கிகளில் மட்டும் நிதி நிர்வாகம் நடைபெறவில்லை. சிறிய அலுவலகங்கள் முதல் பெரிய நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், பங்குச்சந்தை நிறுவனங்கள் என அனைத்துத் துறைகளிலும் நிதி நிர்வாகத்தை கவனிக்க ஆட்கள் தேவைப்படுகின்றனர். வணிகம் உலகின் அச்சாணியாக இருக்கும் வரை நிதி நிர்வாகம் தன் மதிப்பை இழக்காது.
எம்பிஏ மார்க்கெட்டிங்
மனிதர்கள் உயிர்வாழ இதயம் எவ்வளவு முக்கியமோ வணிக உலகில் மார்க்கெட்டிங் (விற்பனைப் பிரிவு) அவ்வளவு முக்கியத்துவம் கொண்டது. இந்தப் பிரிவை அடிப்படையாகக் கொண்டே நிறுவனத்தின் வளர்ச்சி இருக்கும். எனவே விற்பனைப் பிரிவில் திறமையை வளர்த்துக் கொண்டவர்களை, அனைத்து நிறுவனங்களும் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்றுக் கொள்ளும். அவ்வப்போது மாற்றங்களையும், போட்டிகளையும் சந்திக்கும் விற்பனைப் பிரிவில் நிலைத்து நிற்க நிறைய திறமைகள் வேண்டும். குறிப்பாக சிறந்த தகவல் தொடர்புத்திறன், குறையாத ஆர்வம் உள்ளிட்ட சிறப்புத் திறன் பெற்றவர்கள் விற்பனைப் பிரிவில் பல உயரங்களுக்குச் செல்ல முடியும். எம்பிஏ மார்க்கெட்டிங் சிறப்பு பாடப்பிரிவில் தேர்ச்சி பெறுவதுடன், சி.ஏ., சி.எஸ். படிப்புகளையும் படித்து முடித்தவர்கள் வற்றாத வாய்ப்புகளைப் பெறலாம்.
எம்பிஏ ஆபரேஷன்ஸ் மேனேஜ்மென்ட்
ஒவ்வொரு நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவு மற்றும் நிர்வாகப் பிரிவில் பராமரிப்பு மேலாளர், வளர்ச்சி அதிகாரி உள்ளிட்ட பணியிடங்கள் இருக்கும். இவர்கள் உற்பத்திப் பொருள்களின் தயாரிப்பு மற்றும் உற்பத்தி மேம்பாட்டு பணிகளிலும், நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி பற்றிய திட்டமிடுதலிலும் முக்கியப் பங்கு வகிப்பார்கள். இத்தகைய பணிவாய்ப்புகளைப் பெற்றுத் தரும் படிப்பாக எம்பிஏ ஆபரேஷன்ஸ் மேனேஜ்மென்ட் படிப்பு விளங்குகிறது. இவர்கள் புராடக்ட் மேனேஜர், டெக்னிக்கல் சூப்பிரவைசர் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளில் சேர்ந்து திறமையை வளர்த்துக் கொண்டால் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி (சி.டி.ஓ.), மற்றும் பல்வேறு பிரிவுகளில் பொது மேலாளர் பதவி வரை உயர்வு காணலாம்.
எம்பிஏ (ஐ.டி.)
தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பு பொறியியல் துறை சார்ந்தது என்றே நம்மில் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். வணிக நிர்வாகத்திலும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, இயந்திரங்கள், கருவிகளின் நிர்வாகம் (எம்.ஐ.எஸ்) போன்ற பிரிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது. பி.இ., பி.டெக் படிப்புகளில் ஐ.டி. பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள், எம்பிஏ (ஐ.டி.) படிப்பை மேற்படிப்பாகவோ, முதுநிலை பட்டயப் படிப்பாகவோ தேர்வு செய்து படித்தால் சிஸ்டம் அனலிஸ்ட், டெக்னிக்கல் சிஸ்டம்ஸ் மேனேஜர், டெக்னிக்கல் கன்சல்டன்ட், பிசினஸ் டெவலப்மென்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளை அலங்கரிக்கலாம். தொழில்நுட்ப திறன் கொண்டவர்கள், புரோகிராம் சிறப்பாக எழுதுபவர்கள் இந்த பாடப்பிரிவை தேர்வு செய்து பயனடையலாம்.
எம்பிஏ (ஹெச்ஆர்)
நகரங்கள்தோறும் கார்ப்பரேட் நிறுவனங்களாக இருக்கும் இந்த காலத்தில், மனிதவளப் பிரிவு பணியிடங்கள் மதிப்புமிக்கதாகவும், வளமான வாய்ப்பு கொண்டவையாகவும் விளங்குகின்றன. தங்கள் நிறுவனத்திற்குத் தகுதியான ஊழியர்களைத் தேர்வு செய்யும் அதிகாரியாக, அவர்களுக்குப் பயிற்சி வழங்குபவராக, நிறுவன மேம்பாட்டில் பங்கெடுப்பவராக, வேலைவாய்ப்பு உலகத்தை மதிப்பிடுபவராக ஒரு மனிதவளப் பிரிவில் வேலை செய்பவரின் பணிகள் விரிவடைகின்றன. எம்பிஏ படிப்பில் ஹெச்ஆர் பாடப்பிரிவை தேர்வு செய்து படிப்பவர்களுக்கு, பெருநிறுவனங்கள் பலவற்றில் பிரகாசமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
-க. நந்தினி ரவிச்சந்திரன்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews