School Morning Prayer Activities 20.12.19 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 19, 2019

Comments:0

School Morning Prayer Activities 20.12.19


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.12.19
திருக்குறள்

அதிகாரம்:துறவு

திருக்குறள்:348

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

விளக்கம்:

அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள். அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்

பழமொழி

Every dog has his day.

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. புறங் கூறுதல் மாணவனாகிய எனக்கு தகுதி அல்ல எனவே புறங் கூற மாட்டேன்.

 2. பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை இப்போது இருந்தே கடைபிடிக்க முயல்வேன்.

பொன்மொழி

மிக அதிக உயரத்தை அடைய விரும்பினால் கீழ் மட்டத்தில் இருந்து தொடங்குங்கள்...

----- சைரஸ்

பொது அறிவு

1. மனித உடலில் மிகவும் கெட்டியான தோல் எங்குள்ளது?

 கால் பாதத்தில் உள்ளது.

 2.மனிதனின் முதுகுத்தண்டில் எத்தனை எலும்புகள் உள்ளன?

33 எலும்புகள்.

English words & meanings

Jaundice -a medical condition in which the skin and white parts of the eyes become yellow. மஞ்சள் காமாலை.

Juridical - relating to judicial proceedings and the administration of the law.சட்டம் குறித்த சட்டம் சம்பந்தப்பட்ட

ஆரோக்ய வாழ்வு

துளசி இலைகளை எலுமிச்சை சாறு சேர்த்து விழுதாக அரைத்து தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம் .இதனால் சொறி சிரங்கு போன்றவை முற்றிலும் குணமாகும்.

Some important  abbreviations for students

 CIA - Central Intelligence Agency

CPS - Child Protective Services

நீதிக்கதை

யார் ஏழை?

ஒரு பணக்கார அப்பா, அவர் குழந்தைகளை கிராமத்தை சுற்றி காட்ட அழைத்துச் சென்றார். இரண்டு நாள் ஒரு குடிசையில் ஏழை விவசாயிகள் கூட இருந்தாங்க. திரும்ப வரும் போது, அப்பா கேட்டார்,

ஏழை எப்படி இருக்காங்கன்னு பார்த்தியா?… இப்ப என்ன சொல்றே? மகன் சொன்னான் ஆமா..அப்பா..என் கிட்ட ஒரு நாய் குட்டி தான் இருக்கு. ஆனால் அவங்க கிட்ட நாலு இருக்கு.

நம்ம வீட்ல ஸ்விம்மிங் பூல், கார்டன்ல நடுவிலே இருக்கு. ஆனால் அவங்க வீட்டு பக்கத்துல அழகான ஆறு ஓடுது. நாம கலர் கலரா லைட் போட்டு, படங்கள் மாட்டி நம்ம வீட்டு அழகு படுத்தறோம். ஆனா அவங்க வீட்டுல் ரெயின்போ அழகு படுத்துது... நம்ம சுவரோட நம்ம வீட்டு எல்லை முடிஞ்சுடுது. ஆனால் அவங்களுக்கு கண்ணுக்கு எட்டுன் தூரம் வரை அவங்க எல்லை.

நாம காசு குடுத்து அரிசி வாங்குறோம். ஆனா இவங்க நம்ம கிட்ட அதை விக்கறாங்க. நம்மை பாதுக்காக்குறதுக்கு நம்மை சுற்றி சுவர் மட்டும் தான் இருக்கு... ஆனால் இவங்க பாதுகாப்புக்கு நண்பர்கள் இருக்காங்க.. அப்பா!..நாம எவ்வளவு ஏழைனு புரிய வைத்ததற்கு நன்றி அப்பானு சொன்னான். அவங்க அப்பா வாயடைச்சே போயிட்டார். அவருக்கும் இப்ப நிறைய விஷயங்கள் புரிஞ்சது.

வெள்ளி
சமூகவியல்

வேலூர் கோட்டை:         
            16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு கோட்டை ஆகும்.தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகில் உள்ள வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. விஜயநகரப் பேரரசுக் காலத்தில் நாயக்கர் மன்னரான குச்சி பொம்மு நாயக்கரால் கட்டப்பட்டது. இந்தியாவில் அகழியோடு கூடிய ஒரே கோட்டை என்ற பெயரைப் பெற்றது.  இக்கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டையில் மூன்று பக்கங்களில் தண்ணீர் உள்ளது. கிழக்குப் பக்கத்தில் நுழைவாயில் உள்ளது. இக்கோட்டையில் ஒரு  கோயில், ஒரு பள்ளிவாசல் மற்றும் ஒரு  தேவாலயம் உள்ளது.

இன்றைய செய்திகள்

20.12.19

◆உதகையில் உயர்கல்வி மாநாட்டை  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.

◆தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

◆குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்துவதை அடுத்து சென்னை பல்கலைக்கழகம் விடுமுறை அறிவித்தது. இந்நிலையில் மாநிலக் கல்லூரியும் விடுமுறையை அறிவித்துள்ளது.

◆ஓபிசி மாணவர்களுக்கு நவோதயா, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தனியாக இட ஒதுக்கீடு வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

◆அமெரிக்க அதிபர்  ட்ரம்ப்பின் பதவிக்கு ஆபத்து: பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கக்கோரும் தீர்மானம் நிறைவேற்றம்.

◆ சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரண்டு முறை ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை நேற்று முன்தினம் நடைப்பெற்ற போட்டியில்  குல்தீப் யாதவ் தன்வசப்படுத்தி உள்ளார்.

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews