Search This Blog
Sunday, December 15, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மணப்பாறை அருகே பள்ளி மாணவர்கள் இருவர், தினந்தோறும் குதிரையில் பள்ளிக்குச் செல்கின்றனர்.
மாறிவரும் நவீன உலகத்தில் போக்குவரத்து இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. நடைப்பயணம், சைக்கிள், ரிக்ஷா, இரு சக்கர வாகனம், ஆட்டோ, கார் என போக்குவரத்து பல பரிணாமங்ளை எடுத்துள்ளது. இதற்கான எரிபொருள் பயன்பாடு, இயற்கைச் சூழலுக்குக் கேடு விளைவிப்பதாக சூழியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் இரண்டு பள்ளி மாணவர்கள் தினசரி, குதிரையில் பள்ளிக்குச் செல்கின்றனர். மணப்பாறை அருகே தேனூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். தனியார் வங்கியில் கிளை மேலாளராகப் பணியாற்றும் அவர், விலங்குகள் ஆர்வலர். குதிரைகள் குறித்துப் பேசும் பால சுப்பிரமணியன், ''5 குதிரைகளைச் சொந்தமாக வைத்து பராமரித்து வருகிறேன். 'நாட்டுக்குதிரை காப்போம்' என்ற குழுவைத் தொடங்கி நடத்தி வருகிறோம். அதில் தமிழகத்தைச் சேர்ந்த குதிரை வளர்ப்பவர்கள் அனைவரையும் சேர்த்து குதிரைகள் பராமரிப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.
நான் குதிரை வளர்ப்பதைப் பார்த்த அழகர்சாமி, வேலு என்னும் இரு மாணவர்கள் என்னிடம் வந்து குதிரைகள் பற்றித் தெரிந்துகொண்டனர். அவர்கள் இருவரும் தினந்தோறும் குதிரையில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்'' என்கிறார்.
குட்டிக் குதிரையில் தனித்தனியாக இருவரும் லாவகமாக ஏறி அமர்ந்து பயணிக்கின்றனர். மாணவர்கள் இருவரும் குதிரையில் செல்வதை மற்ற மாணவர்களும் ஆர்வத்துடன் பார்க்கின்றனர். தாங்களும் குதிரையில் செல்ல விருப்பம் தெரிவிக்கின்றனர்.
''அழிவின் விளிம்பில் உள்ள குதிரை இனங்களைக் காப்பாற்றவும் சூழலைப் பாதுகாக்கவும் குதிரைப் பயணம் உதவியாக இருக்கும்'' என்கிறார் பால சுப்பிரமணியன்.
பாரம்பரியத்தை மீட்டெடுப்பதற்காக தினமும் பள்ளிக்கு மாணவன் குதிரையில் செல்கிறான். பாரம்பரியத்தை மீட்டெடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளான்.திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வாடிபட்டியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரியும் இவர், இயற்கை விவசாயம் பாரம்பரியமிக்க குதிரை பயணம் போன்ற கலாச்சாரங்களை பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம பொது மக்களுக்கு ஆலோசனை, பயிற்சிகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் மகன் அழகர்சாமி(12).
தேனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் சிறுவன், குதிரையை பராமரிப்பதிலும், பயணிக்கவும் ஆர்வம் காட்டி வந்தான். தற்போது அழகர்சாமி தினமும் பள்ளிக்கு குதிரையில் பயணித்து வருகிறான். மாணவன் குதிரையில் பள்ளிக்கு வருவது ஒட்டுமொத்த மாணவர்கள் மட்டுமல்ல வாகனத்தில் செல்வோரும் வியப்பாக பார்த்து செல்கின்றனர். இயற்கை மற்றும் பாரம்பரியத்தை மீட்டெடுக்க குதிரை சவாரி செய்வதாக மாணவன் தெரிவித்தான்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
சூழலைக் காக்க தினந்தோறும் குதிரையில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.